தல அஜித் சார் கூட ஒர்க் பண்ணனும்... மாயநதி ஹீரோயின் வெண்பாவின் பெரிய ஆசை இதுதானாம்!
Recommended Video
சென்னை: கடந்த ஜனவரி 31ம் தேதி திரைக்கு வந்த மாயநதி திரைப்படம் மக்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
மாயநதி படத்தில் நாயகியாக நடித்துள்ள வெண்பாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

அண்மையில், மாயநதி படம் குறித்த பேட்டியில் பேசிய நடிகை வெண்பா, தல அஜித்துடன் ஒர்க் பண்ணனும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று தெரிவித்தார்.
டாக்டராக மக்களுக்கு சேவை செய்து வந்த அசோக் தியாகராஜன், தனது சினிமா கனவை நனவாக்க அவரே தயாரித்து இயக்கியுள்ள படம் தான் மாயநதி.

பள்ளி பருவ காலத்தில் பலருக்கும் வரும் காதல் ஆசையைத் தான் மாயநதி என்ற டைட்டில் மூலம் அறிமுக இயக்குநர் அசோக் தியாகராஜன் வெளிப்படுத்தியுள்ளார்.
பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெறும் மாணவி கெளசல்யாவாக வெண்பா நடித்துள்ளார்.
அவருக்கு ஆட்டோ ஓட்டும் செந்தில் ஆக அபி சரவணன் நடித்துள்ளார். மேலும், கெளசல்யாவை தாலாட்டி சீராட்டி வளர்த்த தந்தையாக ஆடுகளம் நரேன் நடித்துள்ளார். செந்திலின் நண்பனாகவும், படிக்கும் பெண்ணை காதலிக்காதே என அட்வைஸ் கூறும் கதாபாத்திரத்தில் அப்புக்குட்டி தனது பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

சந்தானத்தின் டகால்டி மற்றும் சசிகுமாரின் நாடோடிகள் 2 படத்துடன் ரிலீசான மாயநதி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தின் வெற்றி ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைத்த வெற்றி என்றும், வெற்றிப் பாய்ச்சல் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
தனியார் யூடியூப் சேனலுக்கு அண்மையில் நாயகி வெண்பா கொடுத்துள்ள பேட்டியில், தல அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும், அஜித் சார் படத்தில் எந்த ரோல் கிடைத்தாலும், நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











