For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரசிகர்களின் கைத்தட்டல் ஆஸ்கார் விருதுக்கு சமம்: நடிகர் டெல்லி கணேஷ்

  By Shankar
  |

  ஈரோடு: ரசிகர்களின் கைத்தட்டல் ஆஸ்கார் விருதுக்கு சமம் என்று நடிகர் டெல்லி கணேஷ் கூறினார்.

  ஈரோடு கவிதாலயம் அமைப்பு சார்பில் குணசித்திர நடிகர் டெல்லி கணேஷுக்கு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

  இந் நிகழ்ச்சிக்கு வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

  இதுவரை 500 திரைப்படங்கள், 750 தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் ஆயிரம் மேடை நாடகங்களிலும் நடித்துள்ளேன். தற்போது நடிகர் கமலின் பாபநாசம், ஜோதிகா நடித்த 36 வயதினிலே ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். டெல்லியில் விமானப் படையில் பணியாற்றி, திரைப் படத்துறைக்கு வந்தேன். எனவே, எனக்கு டெல்லி கணேஷ் என்ற பெயரை, இயக்குநர் பாலச்சந்தர்தான் வைத்தார்.

  Lifetime achievement award for Delhi Ganesh

  தமிழக திரையுலகை காப்பாற்ற, சென்னையில் திரைப்பட நகரம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திரைப்பட நகர், பயனற்ற நிலையில் உள்ளது. ஹைதராபாத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய, திரைப்பட நகர் உள்ளது. அதேபோல், சென்னையில் 40 ஏக்கர் பரப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி, பொது இடங்களில் இரவு நேரங்களில் மட்டும் படம் எடுக்க அரசு அனுமதி அளித்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் பொது இடங்களில் படப்பிடிப்பை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

  கோவில்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், திரைப்படத் துறையினர் சேதம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை கூறி, அங்கு படப்பிடிப்புப் பணிகள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது. திரைப்படம் எடுக்கவே நாங்கள் உள்ளோம். திரைப்படப் படப்பிடிப்பு என்ற பெயரில் முக்கிய இடங்களை கெடுக்க நாங்கள் இல்லை. எனவே, பிரபலமான கோவில்களிலும் படப்பிடிப்பு மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும்.

  எனக்கு, உலக நாயகன் கமல்ஹாசனை பிடிக்கும்.

  மதம், ஜாதி உள்ளிட்ட பிரச்னைகளை தூண்டாத வகையில் தயாரிக்கப்படும் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.

  சேரனின் சிடி திட்டம், சிறிய பட்ஜெட் பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை காக்கும் திட்டமாகும். ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாததால், கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதேபோல், அரசியலிலும் எனக்கு ஈடுபாடில்லை.

  எனது மகன் மகா தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். விரைவில் படத்துக்கான தலைப்பை வெளியிடுவோம்.

  தமிழ் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அனைத்து தமிழ் சினிமா கலைஞர்களிடமும் உள்ளது. ஆனால், என்னை பொறுத்தவரை, ரசிகர்களின் கைத்தட்டல்களே நல்ல கலைஞனின் ஆஸ்கார் விருதாகும்," என்றார் டெல்லி கணேஷ்.

  இந் நிகழ்ச்சியில் கொங்கு கலையரங்கத் தலைவர் பாலு (எ) பாலசுப்பிரமணியன், செயலர் ராஜமாணிக்கம், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து என்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன், கவிதாலயம் ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

  கடந்த கல்வி ஆண்டு அரசுப் பொதுத் தேர்வுகளில் ஈரோடு மாவட்ட அளவில் ஒவ்வொரு பள்ளிகளிலும் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு முதல்வன் விருதை, நடிகர் டெல்லி கணேஷ் வழங்கினார்.

  English summary
  Erode based Kavithalayam has honoured actor Delhi Ganesh with Life Time achievement award.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X