லாஸ் ஏஞ்சல்ஸில் மைக் டைசனுடன் ஷூட்டிங்காம்... நடிகைகளுடன் கலக்கலாய் போஸ் கொடுத்து அறிவித்த நடிகர்!

சென்னை: மைக் டைசனுடனான சண்டைக்காட்சிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் படமாக்கப்படுவதாக பிரபல நடிகர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தப்படியே அசத்தலாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா லீடிங் ரோலில் நடிக்கும் இப்படம் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். இந்தப் படத்தை பிரபல இயக்குநரான பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

மைக் டைசன்..

மைக் டைசன்..

இந்தப் படத்தை கரண் ஜோஹர், சார்மி கவுர் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முன்னாள் குத்துச் சண்டை வீரரான மைக் டைஸனும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மைக் டைசன் இந்திய சினிமாவுக்கு முதல் முறையாக அறிமுகமாகிறார்.

கோவாவில் படப்பிடிப்பு

கோவாவில் படப்பிடிப்பு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. 40 நாட்கள் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. லாக்டவுன் நீக்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் நடைபெற்றது. கடைசியாக கோவாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

லாஸ் வேகாஸ் ஷெட்யூல்

லாஸ் வேகாஸ் ஷெட்யூல்

இந்நிலையில் படத்தின் இறுதிக் காட்சிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே தொடர்பான காட்சிகள் லாஸ் வேகாஸ் நகரில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் லாஸ் வேகாஸ் தெருக்களில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த அனன்யா பாண்டே, லாஸ் வேகாஸ் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து...

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து...

இந்நிலையில் அடுத்த ஷெட்யூல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் தேவர கொண்டா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகைகள் அனன்யா பாண்டே, சார்மி கவுர் மற்றும் இயக்குநர் பூரியுடன் இருக்கும் போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து விஜய் தேவரகொண்டா, Hello from LA என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இந்திய உணவுகள் பரிமாறப்பட்டு..

இந்திய உணவுகள் பரிமாறப்பட்டு..

இதனிடையே லாஸ் ஏஞ்சல்ஸில் மைக் டைசன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை மைக் டைசனுடனான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் படப்பிடிப்பிற்கு தனது மனைவியுடன் வந்த மைக் டைசனுக்கு இந்திய உணவுகள் பரிமாறப்பட்டு விருந்து கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X