இது ’லைட்ஸ், கேமரா, ஆக்ஷன்’ இல்லையாம்.. நம்புங்க நிஜ ஆக்ஷனாம்!
சென்னை: காமெடி படங்களை இயக்கி வந்த சுந்தர். சி, விஷாலை வைத்து மாஸாக ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கியுள்ளார்.
கத்திசண்டை படத்திற்கு பிறகு, இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
ஹிப் ஹாப் ஆதி தமிழா இசையமைத்துள்ள ஆக்ஷன் படத்தில் இடம்பெற்றுள்ள 'லைட்ஸ், கேமரா, ஆக்ஷன்' பாடலின் புரமோ வீடியோ தற்போது ரிலீசாகியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஹிப் ஹாப் ஆதி. இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவை கலக்கி வரும் ஆதி, விஷாலின் ஆக்ஷன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் சண்டை காட்சிகளுடன் பாலிவுட் ஸ்டைலில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஆக்ஷன் என்றே பெயர் வைத்துள்ளார் சுந்தர். சி.
விஷாலுக்கு இணையாக நடிகை தமன்னாவும் ஆக்ஷனில் புகுந்து விளையாடியுள்ளார். ஆக்ஷன் படத்தின் ஷூட்டிங்கின் போது விஷாலுக்கு அடிபட்டதாக செய்திகள் வெளியாகின.
அந்த காட்சிகளை தற்போது வெளியாகியுள்ள 'லைட்ஸ், கேமரா, ஆக்ஷன்' வீடியோ புரமோவில் படக்குழு வெளியிட்டுள்ளது.
விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, கபீர் சிங் துஹான், ஆகான்ஷா புரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஹிப்ஹாப் ஆதியின் ராப் பாடல்களில் இந்த 'லைட், கேமரா, ஆக்ஷன்' பாடல் தனித்துவமான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











