என்ன டைட்டிலே ‘ஏ’ வாம்.. ’ஜல்லிக்கட்டு’ படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசரியின் அடுத்த ஆட்டம்!

திருவனந்தபுரம்: ஜல்லிக்கட்டு எனும் படத்தை இயக்கிய இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி அடுத்ததாக 'A' என்கிற டைட்டிலில் படமெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மாட்டுக்கறி வெட்டும் நாயகனை மையப்படுத்தி உருவான ஜல்லிக்கட்டு படத்தை இயக்கியதற்காக கோவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50வது சர்வதேச சினிமா விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது லிஜோவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தனது அடுத்த ஆட்டத்தை ஆட லிஜோ தொடங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படப்பிடிப்பு ஆரம்பம்

படப்பிடிப்பு ஆரம்பம்

கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் மீண்டும் சினிமா ஷூட்டிங் தொடங்க ஆரம்பித்து இருக்கிறது. ஆஷிக் அபுவின் 'வாரியம்குன்னன்', ஹாகர் மற்றும் காலித் ரஹ்மானின் பெயரிடாத படம் என பல படங்களின் ஷூட்டிங் கேரளாவில் தொடங்க உள்ளது.

ஜூலை 1 முதல்

ஜூலை 1 முதல்

இந்நிலையில், லிஜோ ஜோஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ஏ' படத்தின் ஷூட்டிங்கும் வரும் ஜூலை 1 முதல் தொடங்கும் என நேற்று அசத்தலான டைட்டில் போஸ்டருடன் அறிவித்துள்ளார் இயக்குநர் லிஜோ ஜோஸ். இந்த அறிவிப்பை தொடர்ந்து, லிஜோ ஜோஸின் ரசிகர்கள் மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் இணையத்தில் ‘ஏ' பட போஸ்டரை டிரெண்ட் செய்தனர்.

இந்த டைட்டிலா?

இந்த டைட்டிலா?

முன்னதாக தனது பேஸ்புக் பக்கத்தில் இயக்குநர் லிஜோ ஜோஸ், "யான் ஒரு சினிமா பிடிக்கன் போகுவாடா, ஆரடா தடயான்?" என பதிவிட்டு இருந்ததை பார்த்த ரசிகர்கள், லிஜோ ஜோஸ் இயக்கப் போகும் அடுத்த படத்திற்கு, "ஆரடா தடயான்" யார் என்னை தடுப்பது என்ற அர்த்தமே டைட்டிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘ஏ' என்கிற விவகாரமான டைட்டிலை வைத்துள்ளார்.

என்ன படம்

என்ன படம்

லாக்டவுனுக்கு முன்னதாக ‘சுருளி' எனும் படத்தை அரம்பித்த இயக்குநர் லிஜோ ஜோஸ், அந்த படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடாமல், அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது ஆபாச படமாக இருக்குமா? அல்லது வேறு ஏதாவது சர்ச்சையை வலிக்குமா? என மலையாள திரையுலகம் என்ன படமா இருக்கும் என யோசித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X