LIK Day 6 Box Office - எல்ஐகே 6வது நாள் வசூல் மோசம்.. பாக்ஸ் ஆஃபிஸில் இனி கதை அவ்வளவுதானா?
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் திரைப்படம் எல்ஐகே. அவருடன் சீமான், எஸ்.ஜே.சூர்யா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருக்கிறார். படமானது ஓரளவுக்கு எதிர்பார்ப்போடு கடந்த பத்தாம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. இந்நிலையில் அந்தப் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கின்றன.
விக்னேஷ் சிவன் ஒரு ஹிட் படத்தை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அதன் காரணமாக பிரதீப்பை வைத்து இயக்கும் எல்ஐகே படத்தை சூப்பர் ஹிட்டாக கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உழைத்தார். எதிர்காலத்தில் நடக்கும் கதையின் ஒன்லைனை கையில் எடுத்த அவர் சிஜி ஒர்க்கெல்லாம் சேர்த்து ப்ரெசண்ட் செய்திருந்தார். படத்தின், ட்ரெய்லரும் பாடல்களும் வழக்கம்போல் ஓரளவுக்கு ஹைப்பை கூட்டின. அதுமட்டுமின்றி இப்படம் பெரிய எதிர்பார்ப்பை சந்திப்பதற்கு பிரதீப்பும் ஒரு காரணமாக இருந்தார்.

ஹாட்ரிக் நூறு கோடி: ஏனெனில் இதற்கு முன்னதாக அவர் ஹீரோவாக நடித்த மூன்று படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாயை வசூலித்திருந்தது. அதன் காரணமாக அவரது மார்க்கெட்டும் அதிகரித்திருந்தது. மேலும் சம்பளத்தையும் அவர் உயர்த்தினார் என்றும் தகவல்கள் வந்தன. ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று முறை நூறு கோடி ரூபாயை அள்ளியதால் இந்தப் படமும் அதே மாதிரியான ரிசல்ட்டை பெறும் என PR ரசிகர்கள் ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
படம் சுமார்தான்: ஆனால் படம் சுமார் வரவேற்பையே பெற்றிருக்கிறது. விக்னேஷ் சிவன் மேக்கிங் கொஞ்சம் தனித்துவமாக இருந்தாலும் அது ரசிகர்களிடம் முழுவதுமாக கனெக்ட் ஆவதில்லை. காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில்கூட ஹவுசிங் யூனிட்டுக்குள் காரில் சுற்றி வரும் காட்சியை பலர் ரசிக்கவில்லை. ஆனால் அதற்குள் இன்னொரு விஷயத்தை வைத்திருந்ததாகவும்; அது தனக்கு பிடித்த காட்சி என்றும் கூறியிருந்தார். அப்படி இருக்கும் என்றுதான் பலரும் இந்தப் படத்துக்கும் சென்றார்கள். ஆனால் இதில் ஒன்றுமே இல்லை என ஓபனாக கூறுகிறார்கள்.
என்ன பிரச்னை?: எதிர்கால கதையை கையில் எடுத்தாலும் அதை உருவாக்கிய விதத்தில் விக்கி சொதப்பிவிட்டார் எனவும்; சிஜி வேலைகள் மட்டும்தான் ரசிக்கும்படி இருந்தது என்றும் விமர்சனத்தை முன்வைத்தார்கள். ஆகமொத்தம் இந்தப் படம் விக்னேஷுக்கு சுமார் ஹிட்தான். அவர் எதிர்பார்த்த பெரிய வெற்றி இதில் கிடைக்கவில்லை. வசூலை எடுத்துக்கொண்டாலும் அந்த ஏரியாவிலும் படம் பெரிதாக சோபிக்கவில்லை. சாக்நில்க் இணையதள தகவல்படி முதல் மூன்று நாட்களில் தலா ஏழு கோடி ரூபாய் வசூலித்ததாம்.
சறுக்கிய எல்ஐகே: ஆனால் அடுத்தடுத்த நாட்களில் படம் சறுக்கிவிட்டதாக தெரிகிறது. படம் ரிலீஸாகி ஆறாம் நாளான நேற்று படத்தின் வசூல் ரொம்பவே டல்லடித்திருப்பதாக அந்த இணையதளம் தெரிவிக்கிறது. நேற்று அப்படம் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் மட்டும்தான் வசூலித்ததாம். இதுவரை இந்தியாவில் 36 கோடி ருபாயும் வெளிநாடுகளில் பத்து கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறது. எப்படியோ 50 கோடி ரூபாயை வசூல் நெருங்குவதால் படக்குழுவினரும், பிரதீப்பின் ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேசமயம் பிரதீப்புக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இந்த வசூல் ரொம்ப ரொம்ப குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications















