LIK Day 7 Box Office - விக்னேஷ் சிவனின் எல்ஐகே 7வது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் திரைப்படம் எல்ஐகே. இந்த படத்தில் முதல் டைட்டில் அறிவிப்பு வந்தபோதே பிரச்னை வந்தது. அதனையடுத்து பிரச்னைகள் சரி செய்யப்பட்டு எல்ஐசி என்பதிலிருந்து எல்ஐகே என பெயர் மாற்றப்பட்டது. ஓரளவு எதிர்பார்ப்புடன் படமானது கடந்த பத்தாம் தேதி வெளியானது. படம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இந்நிலையில் ஏழாவது நாளில் படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் வரிசையாக மூன்று படங்களை மெகா ஹிட்டாக கொடுத்தார். அந்தப் படங்கள் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. எனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் எல்ஐகே படமும் அதே ரிசல்ட்டைதான் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் அவுட்லைன், சிஜி வேலைகள் எல்லாம் சூப்பராக இருந்தாலும் படத்தின் திரைக்கதை, ஓவர் அட்வான்ஸ்டு திங்கிங் உள்ளிட்டவைகள் எல்லாம் சேர்ந்து படத்தை சொதப்பிவிட்டன. இதனால் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்க வேண்டிய படம் சுமார் ஹிட்டாகியிருக்கிறது.

LIK Box Office Day 7 Pradeep Ranganathan Film Sees Growth Nears 50 Crore in First Week
Photo Credit:

பிரதீப் ரங்கநாதன் ஓகேதான்: வழக்கம்போல் பிரதீப் ரங்கநாதன் தனது ரசிகர்களை நன்றாகவே மகிழ்வித்தார். அவரது ஸ்டைல், டயலாக் டெலிவிரி உள்ளிட்டவை ரசிக்கும்படி இருந்து கைத்தட்டல்களை பெற்றாலும்; அவரது நடிப்பில் இன்னமும் தனுஷ் சாயல் இருப்பதாக கிண்டல்கள் எழுந்ததையும் தவிர்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி இந்தப் படம் நூறு கோடி ரூபாய் வசூலிக்காது என்பது உறுதியாகிவிட்டதால். இதனால் நூறு கோடி ரூபாய் வசூல் மிஸ் ஆகிவிட்டதே என ஃபீலும் செய்கிறார்கள் ரசிகர்கள்.

Also Read
ஜெயிலர் 2 லீக்.. படக்குழுவின் அதிரடி நடவடிக்கை.. ஜனநாயகன் லீக் அதிர்ச்சி அடங்குவதற்குள் இதுவா?
ஜெயிலர் 2 லீக்.. படக்குழுவின் அதிரடி நடவடிக்கை.. ஜனநாயகன் லீக் அதிர்ச்சி அடங்குவதற்குள் இதுவா?

ஃபீல் செய்யும் விக்னேஷ் சிவன்: விக்னேஷ் சிவனும் இதை நினைத்து ஜாலியாக ஃபீல் செய்திருக்கிறார். நேற்று படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. அதில் பேசிய அவர், "படம் ரிலீஸாகி முதலில் நல்லபடியான விமர்சனங்கள்தான் வந்தன. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் மோசமான விமர்சனங்கள் வந்தன. இதன் காரணமாக படத்துக்கு கூட்டம் குறைந்தது. பிறகு எப்படியோ மீண்டும் நல்ல விமர்சனங்கள் வந்து மீண்டும் தியேட்டருக்கு ரசிகர்கள் வர தொடங்கிவிட்டார்கள்.

பார்த்து பண்ணுங்க: நீங்கள்தான் பார்த்து பண்ணிவிட வேண்டும். ஹெல்ப் செய்யுங்கள். இன்னும் செட்டில்மென்ட் நிறைய பேருக்கு பாக்கி இருக்கிறது. ராமசாமி இந்தப் பணம் வந்துவிடும் என்று பலர் வெளியே காத்திருக்கிறார்கள். எதுவும் சரியாக நடக்கவில்லையென்றால் அந்தப் பணம் ஊ ஊ தான். படத்தை பார்த்துவிட்டு ஏதோ ஒன்று மிஸ் ஆகுது என சொல்கிறார்கள். எது மிஸ் ஆகிறது என்று சொல்வதில்லை. எதையாவது சொல்லி வைத்துவிட்டு போய்விடுகிறார்கள். நான் கேசரி செய்தால் மட்டும் ஏன் காரமாக இல்லை என கேட்கிறார்கள். பிரதீப் ரங்கநாதனுக்கு நான்காவது முறையாக நூறு கோடி ரூபாய் வசூல் போஸ்டர் ஒட்ட வேண்டும்" என்றார்.

வசூல் நிலவரம் என்ன?: இந்நிலையில் படத்தின் வசூல் நிலவரம் குறித்து சாக்நில்க் இணையதளம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஆறாவது நாள் வசூலை காட்டிலும் ஏழாவது நாளான நேற்று படத்துடைய கலெக்ஷன் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அந்தப் படம் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் வசூலித்தது. நேற்று இரண்டு கோடியே 44 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறதாம். ஒரு வாரத்தில் அந்தப் படம் 50 கோடி ரூபாய் வசூலை ஒரு வாரத்தில் நெருங்கியிருப்பதாகவும் அந்த இணையதளம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X