LIK Day 4 Box Office - எல்ஐகே நான்காவது நாள் வசூல் எவ்வளவு?.. பாக்ஸ் ஆஃபிஸில் சரிவு

சென்னை: விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் எல்ஐகே. இதில் சீமான், எஸ்.ஜே.சூர்யா, க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோரும் நடிக்க; அனிருத் இசையமைத்திருக்கிறார். ஓரளவுக்கு எதிர்பார்ப்புடன் கடந்த பத்தாம் தேதி படமானது ரிலீஸானது. போட்டியாக எந்த பெரிய படமும் ரிலீஸாகவில்லை. எனவே அசால்ட்டாக சம்பவம் செய்யும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் சுமாராக இருந்ததால் ஓரளவுக்குதான் வரவேற்பை பெற்றது.

அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கை நழுவி போனது. எனவே ஒரு பெரிய ஹிட்டை கொடுத்து தன்னை பற்றி விமர்சித்தவர்களுக்கும், கிண்டலாக பேசியவர்களுக்கும் பதிலடி கொடுக்க நினைத்தார் விக்கி. அதனையடுத்து அடுத்த பட ஹீரோவாக இப்போதைய சென்சேஷனல் பிரதீப் ரங்கநாதனை ஃபிக்ஸ் செய்தார். பிரதீப் இதற்கு முன்னதாக நடித்த மூன்று படங்களும் 100 கோடி ரூபாயை அள்ளி கெத்து காண்பித்தது. எனவே கண்டிப்பாக அவரது மார்க்கெட்டும், தன்னுடைய மேக்கிங்கும் சேர்ந்தால் வெற்றி கிடைக்கும் என கணக்கு போட்டிருந்தார் இயக்குநர்.

LIK Box Office Drops Vignesh Shivan - Pradeep Ranganathan Film Sees Sharp Fall on Day 4
Photo Credit:

பத்தாம் தேதி ரிலீஸ்: படத்தில் பிரதீப்புடன் சீமான், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படத்தின் வேலை அப்போதே முடிந்துவிட்டாலும் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போனது. சூழல் இப்படி இருக்க அனைத்தும் சுமூகமாக முடிந்ததால் கடந்த பத்தாம் தேதி ரிலீஸானது. படத்துக்கு ஓரளவுக்கு எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. நிச்சயம் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் விக்னேஷ் சிவன் இருந்தார். மறுபக்கமோ பிரதீப்பின் ரசிகர்கள், பிரதீப்புக்கான வெற்றி வைபை இந்தப் படம் தடுத்துவிடுமோ என்று அஞ்சினார்கள்.

Also Read
விஜய் ஊட்டியில் மீண்டும் கை கட்டி நிற்காமல் இருந்தால் சரி.. பெரம்பூர் தொகுதியில் கிழித்தெடுத்த ரீல் அப்பா
விஜய் ஊட்டியில் மீண்டும் கை கட்டி நிற்காமல் இருந்தால் சரி.. பெரம்பூர் தொகுதியில் கிழித்தெடுத்த ரீல் அப்பா

படம் சுமார்தான்: அந்த அச்சத்தோடும், நம்பிக்கையோடும் பலரும் படம் பார்த்தார்கள். ஆனால், தாங்கள் நினைத்தது மாதிரியே விக்னேஷ் சிவன் சொதப்பியிருக்கிறார் என்று புலம்பினார்கள். படத்தில் சிஜி வேலைகள் மட்டும்தான் சரியாக இருக்கின்றன. கதையாக எடுத்துக்கொண்டால் நல்ல கதைதான் ஆனாலும் விக்னேஷ் சிவன் தனது மேக்கிங்கில் பயங்கரமாக சொதப்பிவிட்டார். திரைக்கதையில் எல்லாம் ஒன்றுமே இல்லை என நொந்துகொண்டார்கள். எனவே படமானது சுமார் ஹிட் லிஸ்ட்டில்தான் சேர்ந்தது.

சோகத்தில் PR ரசிகர்கள்: பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களோ சோகத்துக்கு சென்றுவிட்டார்கள். இதுவரை ஹாட்ரிக் 100 கோடி வசூலை அள்ளிய ஹீரோவை அழைத்து வந்து இப்படி சொதப்பிவிட்டாரே. இந்தப் படத்தில் பிரதீப் நடித்திருக்கவே கூடாது என்று விமர்சித்தார்கள். அதுமட்டுமின்றி இந்தக் கதை சிவகார்த்திகேயன் நடித்திருக்க வேண்டியது; நல்லவேளை எங்கள் எஸ்கே அதில் நடிக்கவில்லை என அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள். இப்படி விமர்சனத்தில் படம் படு சேதாரம் ஆகிவிட்டது.

வசூல் நிலவரம்: அதேசமயம் வசூலில் முதல் மூன்று நாட்களில் படம் ஓரளவுக்கு நல்ல நிலைமையில்தான் இருந்தது. ஆனால் நான்காவது நாளான நேற்று படத்தின் வசூல் மொத்தமாக படுத்துவிட்டது என Sacnilk இணையதள தரவுகள் கூறுகின்றன. அந்த இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி நேற்று இப்படமானது மொத்தமே 3.44 கோடி ரூபாயைத்தான் வசூலித்திருக்கிறது. தமிழில் 2.76 கோடி ரூபாயும், தெலுங்கில் 68 லட்சம் மட்டுமே வசூல் வந்திருக்கிறதாம். நேற்று முன்தினம் அந்தப் படம் 8.69 கோடி ரூபாய் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் வசூல் சரிய ஆரம்பித்துவிட்டதால் இனி வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X