வானினும் இத் திரைநிலத்தில் யான் உயரம் தொட.. LIK ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் போட்ட இன்ஸ்டா போஸ்ட்!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், எல்லாருமே படத்தின் ஒளிப்பதிவை கொண்டாடி வருகின்றனர். அதற்கு மிக முக்கிய காரணமே ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தான்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் பிரதீப் ரங்கநாதனின் ரொம்பவே வீக்கான படம் என்றும் பிரதீப் ரங்கநாதன் வெற்றி டிராக்கை விக்னேஷ் சிவன் முடித்து விட்டார் என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

LIK Cinematographer Ravi Varman shares a heartfelt thanks note to fans

ஆனால், அதே நேரத்தில் தீமா தீமா பாடல் முதல் 2040ல் தமிழ்நாடு எப்படி இருக்கும் என்பதை தனது கலர்ஃபுல் கேமரா கோணத்தின் மூலமாக திரை முழுவதும் வண்ணத்தை ஓவியம் போல ரவி வர்மன் தீட்டிய நிலையில், அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். அதற்காக தற்போது நன்றி தெரிவித்து போஸ்ட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

யாரு இந்த ரவி வர்மன்?: ஹீரோக்கள், ஹீரோயின்கள் மற்றும் இயக்குநர்களே பெரும்பாலும் அதிகளவிலான மீடியா வெளிச்சத்தை அடைகின்றனர். அவர்களை அந்தளவுக்கு உச்சத்துக்கு கொண்டு செல்வதே கேமராவுக்குப் பின்னாடி இருந்து வேலை பார்க்கும் ஒளிப்பதிவாளர்கள் தான். ஜலமர்மராம் எனும் மலையாள படத்துக்கு 1999ம் ஆண்டு ஒளிப்பதிவு செய்து ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் தான் ரவி வர்மன். தமிழில் ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆட்டோகிராஃப், அந்நியன், வில்லு, தசாவதாரம், காற்று வெளியிடை, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2, இந்தியன் 2 மற்றும் கடைசியாக தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னம் மற்றும் ஷங்கரின் ஃபேவரைட் ஒளிப்பதிவாளர் தான் இந்த ரவி வர்மன்.

பாராட்டும் ரசிகர்கள்: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை ஷங்கர் படத்தை போல பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்றால் அதற்கு ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் பணியாற்றிய ரவி வர்மனை போட்டால் தான் உண்டு என நினைத்த விக்னேஷ் சிவன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் ரவி வர்மனை கமிட் செய்தார். படத்திற்கு எதிராக ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் படம் முழுக்க நியான் வெளிச்சத்தில் அழகான வண்ணங்களை தூவி படத்தை பார்க்க வைத்ததே இவரது மேஜிக் தான்.

ரவி வர்மன் நன்றி: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி சுமார் 50 கோடி வசூலை உலகம் முழுவதும் நெருங்கி உள்ள நிலையில், தனது ஒளிப்பதிவை பாராட்டியவர்களின் வீடியோ க்ளிப்பிங்கை ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார் ரவி வர்மன், அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் கேப்ஷனை இங்கே பார்க்கலாம்.

"This film world is not merely a play ground,
it's an invaluable map of my hopes dreams and desires.

My victory (film history) has drawn on this crust with my sweet only,
it cannot be expressed in more words alone.

Countless thanks from the utmost bottom of
my heart who blessed me all throughout this universe...

Thanks a lot for your kindness and compassion
on me...

With eternal love,
Ravivarman

வானினும்
இத் திரைநிலத்தில்
யான் உயரம் தொட
வாழ்த்துகளை
ஊடகங்கள் வழியும்
உள்மூச்சுக் காற்றின் வழியும்
உலகின் எண்திசையிவிருந்தும்
அனுப்பி
எனை மகிழ் கடலில்
மூழ்கவைத்த
எந்நாளும் எனக்குத்
தோள்கொடுக்கும்
தோழமைகட்கு
என் உயிர கலந்த நன்றிகள் கடலளவு

நெகிழ்ந்த அன்பில்
உங்கள்
இரவிவர்மன்."

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X