பண தட்டுப்பாடு?.. விக்னேஷ் சிவன் வைத்த கோரிக்கை?.. மறுத்த LIK தயாரிப்பாள்ர்?
சென்னை: இயக்குநரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன்; பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோரை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. அடுத்த மாதம் படமானது ரிலீஸாகிறது. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகி பேசுபொருளாகியிருக்கிறது.
போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான படங்களையே இயக்கியிருக்கிறார். அவர் இயக்கிய படங்களிலேயே நானும் ரௌடிதான் மட்டும்தான் அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தின் ரிசல்ட்டை பார்த்துதான் அடுத்ததாக சூர்யா ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் பாசிட்டிவ் ரிசல்ட்டை தரவில்லை.
அஜித் படமும் ட்ராப்: தொடர்ந்து இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் தோல்வியடைய; அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பு அமைந்தது. சில வருடங்களுக்கு முன்பு அதுதான் ஹாட் டாபிக். ஆனால் அப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறினார். அவர் வெளியேறினார் என்று தகவல் வந்தாலும்; அவர் கூறிய கதையின் இரண்டாம் பாகம் திருப்தி இல்லாததால் வெளியேற்றப்பட்டார் என்றும் சிலர் சொல்வதுண்டு.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: அஜித் படம் ட்ராப்பானதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியிருக்கிறார் விக்கி. இதில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க; எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களை ஏற்றிருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகியிருக்கிறார். அடுத்த மாதம் 18ஆம் தேதி ரிலீஸாகிறது.
தள்ளிப்போன ரிலீஸ்: முதலில் இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் டிசம்பர் மாதத்துக்கு தள்ளிப்போயிருக்கிறது. ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறார். எனவே அந்த வெற்றி இந்தப் படத்திலும் தொடருமா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இன்னும் கொஞ்சம் ஷூட்டிங் பாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
பல்பு கொடுத்த தயாரிப்பாளர்?: இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தை லலித்குமார் ஆனந்த்தான் தயாரிக்கிறார். விக்னேஷ் சிவன் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து தருவதாக சொல்லித்தான் கமிட்டானாராம். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் விக்னேஷ் சிவனின் மேனேஜர் தயாரிப்பாளரிடம் சென்று, 'இயக்குநருக்கு பணம் கொஞ்சம் டைட்டாகிவிட்டது. அதனால் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது' என்று கூற; அதற்கு லலித்தோ, 'நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் 15 கோடி ரூபாயில் கார் வாங்கிக்கொடுத்த புகைப்படத்தை பார்த்து; பணம் இல்லையா?' என்று கேட்டதாக; வலைப்பேச்சு குழுவினர் ஒரு வீடியோவில் கூறியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











