LIK ஹிட்டு ப்ரோ.. முதல் காட்சி முடிந்ததும் கட்டிப் பிடித்துக் கொண்ட விக்னேஷ் சிவன் - PR - அனிருத்

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ருத்தி ஷெட்டி, சீமான், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் லவ் இன்சூரன்ஸ் கொம்பெனி. இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியானது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை காமெடியாகவும் எமோஷனலாகவும் அதே நேரத்தில் சமகால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் திரைக்கதையை அமைத்துள்ளதால் படம் மிகவும் எங்கேஜ்ஜிங்காக இருக்கிறது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக அனிருத் மிகவும் மெனக்கெட்டு இசையமைத்துள்ளார் என்றும் படத்தின் கதாநாயகன் என்றால் அது அனிருத் தான் என்றும் கூறும் அளவிற்கு ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணி இசை மிக சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளார். படத்தின் வெற்றியில் அனிருத் இசைக்கு மிக முக்கியமான பங்கு இருக்கும் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

LIK First Show Celebration Vignesh Shivan Pradeep Ranganathan amp amp Anirudh Share Emotional Hug Fans Declare It a Blockbuster

எமோஷனல்: இந்நிலையில் படத்தின் முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்களின் ஆரவார வெள்ளத்திற்கு மத்தியில் படத்தின் நடிகர் பிரதீப் ரங்கநாதன் படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்து, தனது அன்பை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் அனிருத்தையும் கட்டிப்பிடித்து தனது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தினார். மொத்த படக்குழுவினரும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். இப்படி இருக்கையில் பிரதீப் ரங்கநாதன் அனிருத்தை கட்டி பிடித்து அன்பை மகிழ்ச்சியை வெளிப்படுத்திய போது ரசிகர்கள் பலரும் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்தனர். அப்போது பிரதீப் ரங்கநாதன் மிகவும் எமோஷனல் ஆகிவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

திருப்தி: மேலும் பலரும் மொத்த பட குழுவினரையும் பாராட்டி வருகிறார்கள். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஏற்கனவே வெளியான படங்கள் எல்லாமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததால், இந்த படம் அவரது நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக சாதனை படைக்கும் என்று பலரும் பாராட்டி வருவதால் மொத்த படக்குழுவினரும் திரையரங்க உரிமையாளர்களும் திருப்தியாக உள்ளனர். படத்திற்கு முதல் நாளே நல்ல புக்கிங் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X