LIK Box Office: 100 கோடிக்கு போஸ்டர் அடிக்காம விடுவதா இல்லை.. முதல் வாரத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான படமான லவ் இன்சுரன்ஸ் கொம்பனி, கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் முழுக்க முழுக்க எதிர்காலத்தில் காதல் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவானது என்றாலும், படம் பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வகையில் இருக்கிறது என்று பாசிடிவான விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் மிகவும் ஸ்லோவாகத்தான் நகர்ந்து வருகிறது என்பதால் படம் முதல் வாரத்தில் ரூபாய் 54.3 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படம் சமகால இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் முழுக்க வரும் நகைச்சுவை படத்தின் திரைக்கதையை ஜன ரஞ்சகமாக நகர்த்தி கொண்டு செல்கிறது என்று பலரும் பாராட்டுகின்றனர். படம் கடந்த ஆண்டே ரிலீஸ்க்கு தயார் என்றாலும், சில பல காரணங்களால் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
பிரதீப் ரங்கநாதன் நடித்தாலே ரூபாய் 100 கோடிகள் வசூல் உறுதி என்று திரையுலகம் கணக்கு போட்டு வரும் நிலையில் லவ் இன்சூரன்ஸ் கொம்பனி படம் ரூபாய் 100 கோடிகளை வசூலிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தாலும், இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து படத்திற்காக புரோமோசன்களில் ஈடுபட்டு வருகிறார். படம் இன்னும் தியேட்டரில் எப்படியும் மூன்று வாரங்கள் ஓடும் என்பதால், எப்படியும் ரூபாய் 100 கோடிகள் வசூல் என்பதை எட்டாமல் ஓயமாட்டார் போலத் தெரிகிறது.
பாராட்டு: படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் காட்சிகள், சீமானின் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தியது என்றால் அது அனிருத்தின் பின்னணி இசை தான் என்று பலரும் கூறுகிறார்கள். இப்படி இருக்கையில், படம் வரும் காலங்களில் அதிக அளவில் வசூலைக் குவித்து ரூபாய் 100 கோடிகள் வசூலை எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். படத்திற்கு தமிழைக் காட்டிலும் தெலுங்கில் சற்று கூடுதலான வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வசூல்:ஏப்ரல் 10ஆம் தேதி லவ் இன்சுரன்ஸ் கொம்பனி, ரிலீஸ் ஆனது. படம் முழுக்க முழுக்க எதிர்காலத்தில் காதல் எப்படி இருக்கும், அதில் இந்த ஏ.ஐ என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கற்பனையில் உருவானது என்றாலும், படம் பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வகையில் இருக்கிறது என்று பாசிடிவான விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் மிகவும் ஸ்லோவாகத்தான் நகர்ந்து வருகிறது என்பதால் படம் முதல் வாரத்தில் ரூபாய் 54.3 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications