LIK Release Date: LIK ரிலீஸ்க்கு ஒருவழியா தேதிய குறிச்சுட்டாங்க.. கூடவே பஞ்சாயத்தும் இருக்குதே?

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் LIK . கடந்த ஆண்டே படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து விட்ட நிலையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான டிராகன் படத்துடன் இந்த படமும் வெளியாகும் என்ற பேச்சுக்களும் அடிபட்டது, ஏன் அறிவிப்புகளுமே வெளியானது. ஆனால் டியூட் மற்றும் LIK என இரண்டுமே பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டது.

அடுத்ததாக படம் காதலர் தினத்திற்கு வெளியாகும் என்று பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் பிப்ரவரி 19ஆம் தேதி ஜன நாயகன் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற புரளி திரைத்துறையில் கிளம்பியதால் அந்த முயற்சியை படக்குழு கைவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கையில் படத்தை வரும் மார்ச் மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்று படத்தின் முதன்மைத் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் முடிவெடுத்துள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. ஆனால் இந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுமானால் படத்தை மார்ச் மாதம் 26ஆம் தேதி ரிலீஸ் செய்ய இயக்குநர் விக்னேஷ் சிவன் விரும்புவதாக கூறப்படுகிறது. அதற்கு இருவர் தரப்பிலும் இருவேறு காரணங்கள் சொல்லப்படுகிறதாம்.

முட்டுக்கட்டை போடும் விக்கி?: அதாவது மார்ச் 19ஆம் தேதி நடிகர் யாஷின் படமான டாக்சிக் படம் வெளியாகிறது என்பதால் அந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு விடும் என்பதால் LIK படத்திற்கு எதிர்பார்க்கும் அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்காது என்றும் விக்னேஷ் சிவன் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளரோ, மார்ச் 19ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்தால் சித்திரை 1ஆம் தேதி வரை படம் தியேட்டரில் இருக்கும் எனவே தான் படத்திற்கு செலவு செய்த பணத்தை எடுத்துவிடலாம் என்று அவர் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

LIK Release Date Finally Fixed But Trouble Brews Behind the Scenes Nayanthara Vs Vignesh Shivan

இதுதான் விசயமா?: LIK படத்தின் இணை தயாரிப்பாளர் என்றால் அது நடிகை நயன்தாரா. இவர் டாக்ஸிக் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் டாக்சிக் படம் தமிழ்நாட்டில் வெளியாகி பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தால், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனக்கு ஒரு தரமான கம் பேக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. அதே போல் விக்னேஷ் சிவனும் தனது படத்தை நயனின் படத்திற்கு எதிராக ரிலீஸ் செய்ய விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவரம் தெரிந்த பலரும் ஒரு படத்தை எடுத்துவிட்டு அதை ரிலீஸ் செய்ய எவ்வளவு பிரச்னைகள் வருகிறது என்று பேசிக் கொள்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X