டிராகன் பட வெற்றியை கொண்டாடிய LIK டீம்... விக்னேஷ் சிவன் போட்ட மெசேஜ் யாருக்குனு புரிஞ்சிடுச்சு!

சென்னை: கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். அதனை தொடர்ந்து லவ் டுடே, டிராகன் படத்தின் தொடர் வெற்றி மூலம் சென்சேஷனல் ஹிட் ஹீரோவாக மாறியுள்ளார். டிராகன் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மட்டும் இல்லாமல் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரும் இப்படத்தை புகழ்ந்து பேசினார். தற்போது LIK படக்குழுவினர் டிராகன் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஹாட்ரிக் வெற்றிக்காக பிரதீப் ரங்கநாதன் காத்திருக்கிறார்.

சூப்பர் ஹிட்: 5 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே திரைப்படம் 30 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளைஞர்களுக்கு பிடித்த படமாக அமைந்தது. மேலும், யுவன் இசையில் உருவான என்னை விட்டு உயிர் போனாலும், அவளை என்னை பார்த்தா, கிஸா பாடல்களும் அதிரி புதிரி ஹிட் அடித்தன. 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ்களுக்கு பிடித்த ஃபேவரட் டோனாக மாறியது. பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற காமெடி சீன்கள் ரசிக்கும் படி இருந்தன.

Dragon Pradeep ranganathan VIGNESH SHIVAN

பக்கத்து வீட்டு பையன்: லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது கல்லூரி நணபர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் நடித்தார். இப்படம் வெளியான 5 நாளில் 50 கோடி வசூலை ஈட்டி தயாரிப்பாளருக்கும் பெரிய லாபத்தை அளித்துள்ளது. பார்க்க பக்கத்து வீட்டு பையன் போலவும், அவரது நடிப்பு அப்படியே தனுஷ், பிரபுதேவாவை பிரதிபலிப்பதாக தெரிவிக்கின்றனர். இளம் இயக்குநர்களின் நம்பிக்கை நாயகனாக பிரதீப் ரங்கநாதன் வளர்ந்து வருகிறார்.

டிராகன் வெற்றி: தனுஷ் இயக்கத்தில் வெளியான NEEK படத்திற்கு கிடைக்காத வரவேற்பு டிராகன் படத்திற்கு கிடைத்துள்ளது. விறுவிறுப்பான கதையும், சென்டிமெண்ட் காட்சிகளும், காதல் தோல்வி என கலகலப்பாக படம் முடிவடைகிறது. கல்வியை வலியுறுத்தும் படம் என்பதால் எல்லோருக்கும் பிடித்த படமாகவும் மாறியுள்ளது. படம் வெளியான நாள் முதல் இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து முன்னணி இயக்குநராக மாறியுள்ளார். இயக்குநர் ஷங்கர் பாராட்டி பேசியுள்ளார். அதற்கு, பிரதீப் ரங்கநாதனும் நன்றி தெரிவித்து பதிவிட்டார்.

Dragon Pradeep ranganathan VIGNESH SHIVAN

LIK: பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார். இதில், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டிராகன் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு காதல் பாட்டும் பாடியுள்ளார். அப்பாட்டை சிம்பு பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாடல் எழுதுவது குறித்து டிராகன் பட விழாவில் விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார். நான் பாட்டு எழுத காரணம் சிம்பு தான், அவர் கொடுத்த ஊக்கம் தான் என்னை பாட்டு எழுத வைத்தது. நல்ல நண்பனாகவும் இருக்கிறார் என விக்னேஷ் தெரிவித்தார்.

சீறும் டிராகன்: லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தற்போது டிராகன் படத்தின் வெற்றியை LIK படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒன்றை பதிவிட்டுள்ளார். டிராகன் படத்தின் வெற்றியை கொண்டாடும் நேரத்திற்காக காத்திருந்தோம். பிரதீப் ரங்கநாதன் இந்த வெற்றிக்கு தகுதியானவர் தான். பிரதீப் மேலும் பல உயரங்களை தொட வேண்டும். சொல்லி வைத்த மாதிரி சீறும் டிராகன். பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும், வசூல் சாதனை செய்து கொண்டிருக்கும் டிராகன் வெற்றியை LIK படக்குழுவினருடன் கொண்டாடினோம். பிரதீப் பயர் ஆன பர்ஃபாமென்ஸை கொடுத்துள்ளார். மக்களுக்கு பிடித்த படமாகவும் மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X