Actor Vijay: விஜய்க்கு மட்டுமில்லீங்க.. வெங்கட்பிரபுவுக்கும்தான்.. பாரபட்சம் காட்டாத ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் தற்போது கேரளாவில் துவங்கியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார் நடிகர் விஜய். கேரளாவில் விஜய்க்கு தீவிர ரசிகர்கள் ஏராளமானோர் காணப்படுகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் விஜய் வருகையையொட்டி விமானநிலையத்தில் காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் விஜய்யை பார்த்து உற்சாக ஆரவாரம் செய்தனர். அவரும் அவர்களுக்கு கையசைத்தும் வணக்கம் செலுத்தியும் மகிழ்ந்தார். தொடர்ந்து அவரது சூட்டிங் நடக்கும் இடம்வரையில் அவரது காரை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றதையும் பார்க்க முடிந்தது.

இந்தப் படத்தின் சூட்டிங் முன்னதாக சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் படக்குழுவினர் மாஸ்கோ செல்லவுள்ளனர். இதனிடையே தற்போது இந்தப் படத்தின் சூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக காவலன் படத்தின் சூட்டிங் கேரளாவில் நடந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் கேரளாவில் சூட்டிங் நடத்தப்படுகிறது. இதனால் கேரள ரசிகர்கள் ஏராளமான விஷயங்களை முன்னெடுத்துள்ளனர். விஜய்க்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

Like Actor Vijay The greatest of all time movie director Venkat prabhu gets warm welcome from Kerala fans

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. முன்னதாக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் மங்காத்தா உள்ளிட்ட படங்கள் மாஸாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தன. அஜித்தின் கேரியரில் இந்தப் படம் மிகப்பெரிய வசூலை பெற்றது. தற்போதும் இந்தப் படம் அஜித் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட்டாக அமைந்துள்ளது. இதேபோல சூர்யா, கார்த்தியையும் வித்தியாசமான திரைக்கதையில் இணைத்து படங்களை கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.

இயக்குநர் வெங்கட்பிரபு: இந்நிலையில் விஜய்யின் GOAT படத்தை அவர் இயக்கிவருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகவுள்ளார் விஜய். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதனால் GOAT மற்றும் தளபதி 69 படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளன. தளபதி 69 படத்தை இயக்கவுள்ள இயக்குநர் குறித்து இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள விஜய்யின் இந்தப் படம் மரண மாஸான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்ப சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இந்தப் படம் உருவாகி வருவதும் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவேறு கெட்டப்பில் விஜய்: படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்து வரும் சூழலில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. மேலும் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி போன்ற நட்சத்திரங்கள் இணைந்துள்ளதும் மோகன் படத்தின் வில்லனாக நடித்துவருவதும் படத்திற்கு மேலும் வலிமையை சேர்க்கும் விஷயங்களாக அமைந்துள்ளன. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் சூழலில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளதும் படத்திற்கு கலர்புல் காம்பினேஷனாக அமைந்துள்ளது.

கேரள சூட்டிங்: நேற்றைய தினம் விஜய் சூட்டிங்கிற்காக திருவனந்தபுரம் சென்ற நிலையில் ஏராளமான ரசிகர்கள் காத்திருந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். இதனால் திருவனந்தபுரம் விமானநிலையம் மட்டுமில்லாமல் சாலைகளும் பரபரப்பாக காணப்பட்டன. இதனிடையே இன்றைய தினம் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் பிரேம்ஜி திருவனந்தபுரம் சென்றடைந்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று இரவு வரை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இந்தப் படத்திற்கான சூட்டிங்கை நடத்தி முடித்துள்ள வெங்கட் பிரபு இன்று காலை விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர். இன்றைய தினம் திருவனந்தபுரத்தில் GOAT படத்தின் இரவில்தான் எடுக்கப்பட உள்ளதால் அவர்கள் இன்று காலை விமானத்தில் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X