பாவம் கேவிஎன்.. ஜன நாயகன் மட்டுமல்ல.. டாக்ஸிக் பட ரிலீஸும் மீண்டும் தள்ளிப்போனது.. ஏன் தெரியுமா?

பெங்களூரு: நடிகர் யஷ்ஷின் "டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்" (Toxic - A Fairy Tale For Grown Ups) திரைப்படம் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யஷ் தெரிவித்துள்ளார். சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில், படம் முழுமையடைந்துவிட்டதாகவும், உலகளாவிய வெளியீட்டிற்கு ஏற்ப புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என யஷ் குறிப்பிட்டுள்ளார்.

வெளியீட்டுத் தேதி மாற்றத்திற்குக் காரணம் குறித்து யஷ் விளக்கினார். சினிமாகான் நிகழ்வில் 'டாக்ஸிக்' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, உலகளவில் அதன் முழுத் திறனையும் அடைய வேண்டும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டணிகளை ஒருங்கிணைத்து வருவதால், விரைவில் படம் உலகெங்கும் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Like Jana Nayagan Now KVN s next project Toxic Release date also uncertain

"'டாக்ஸிக்' அப்படி ஒரு பயணம். நாம் உருவாக்கும் சில திரைப்படங்கள் நமக்கு சினிமாவின் மீது ஏன் காதல் ஏற்பட்டது என்பதை மீண்டும் நினைவூட்டும்" என்று யஷ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சினிமாகானில் கிடைத்த அமோக உலகளாவிய வரவேற்பு, இந்த படத்தை பற்றி படக்குழு எப்போதும் நம்பியிருந்ததை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்திய சினிமா உலக அரங்கில் தனது குரலை வெளிப்படுத்தி அடியெடுத்து வைக்கும் வேளையில், தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

"டாக்ஸிக் திரைப்படம் நிறைவடைந்துவிட்டது. உலகளாவிய விநியோகம் மற்றும் புதிய விநியோகஸ்தர்களை ஒருங்கிணைத்து வருவதால், வெளியீட்டு காலக்கெடுவை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளோம்" என்று யஷ் மேலும் தெரிவித்தார். கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை, கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' திரைப்படத்தில் யஷ்ஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக, யஷ் 'டாக்ஸிக்' படத்தை ஆஸ்கார் விருது வென்ற 'சின்னர்ஸ்' படத்துடன் ஒப்பிட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் விஜய்யுடன் இணைந்த ஜன நாயகன் படத்திற்கு இன்னமும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜன நாயகன் ஜூன் ரிலீஸுக்கு ஏதாவது திட்டமிட்டுள்ளதா? அதன் காரணமாக டாக்ஸிக் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா என பல கேள்விகள் எழுந்துள்ளன.

யஷ் நடித்த ராமாயணா திரைப்படத்தின் டீசர் வெளியான போதும் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. தொடர்ந்து பெரியளவில் யஷ் முதலீடு செய்துள்ள நிலையில், அதனை பக்காவாக பிசினஸ் செய்து லாபம் பார்க்கவே காலம் தாழ்த்துகிறார் என்கின்றனர். இந்த படத்தையாவது தயாரிப்பு நிறுவனம் பத்திரமாக வைத்திருக்குமா? அல்லது லீக் ஆகும் அளவுக்கு பார்த்துக்குமா? என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X