Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நானும் லோகேஷும் காதல் கோட்டை அஜித் தேவயானி மாதிரி பாக்காமையே இருக்கோம்... மன்சூர் அலி கான் நகைச்சுவை
சென்னை: சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் மன்சூர் அலி கான்.
ஏற்கனவே பிரபலமான நடிகராக இருக்கும் மன்சூர் அலி கானை மேற்கொண்டு பிரபலம் அடையச் செய்துள்ளார் இயக்குநனர் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் தனக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே உள்ள நட்பு பற்றி மன்சூர் அலி கான் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாகிறாரா பாலிவுட் இயக்குநர்?: லோகேஷ் என்ன சொல்லப் போறார்
கைதி
கைதி திரைப்படம் எழுதும் போது மன்சூர் அலி கானை நினைத்துதான் அந்தக் கதையை எழுதியதாக லோகேஷ் பலமுறை பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். பின்னர் கார்த்தி நடிப்பதாக முடிவானவுடன் அந்த கதையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, பட்ஜெட் உயர்ந்து, ஆக்சன் பிளாக்குகள் அதிகரித்து, அதன் பிறகு வெளிவந்து மக்கள் மனதில் இடம் பெற்றது கைதி திரைப்படம். ஆனால் மன்சூர் அலி கான் அதில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மட்டும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.
மன்சூரின் ரசிகன்
அவர் மன்சூர் அலி கானுக்கு ரசிகராக மாறியதற்கு காரணம் அவருடைய நடவடிக்கைகள்தான். பொதுவாக ஒரு பேட்டி கொடுத்தால் கூட சபை நாகரீகம் கருதி கேமராவிற்கு முன்பு நடிப்பார்கள். ஆனால் மன்சூர் அலி கான் எதார்த்தமாக இருப்பார். அவர் செய்யும் விஷயங்களை யாருமே செய்ய முடியாது. அதனால் எனக்கு அவரை பிடிக்கும் என்று லோகேஷ் கூறியிருக்கிறார்.
எப்போது நடிப்பார்
சமீபத்தில் கூட விக்ரம் திரைப்படத்தின் புரமோஷனில் மன்சூர் அலி கானை வைத்து எப்போதும் படம் பண்ணுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒவ்வொரு படத்திலும் அவருக்காக ஒரு கதாபாத்திரம் எழுதுவேன் ஆனால் அது அமையாமலே போய்விடும் கூடிய விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்று லோகேஷ் கூறியிருக்கிறார்.
மன்சூரின் ஆசை
இதே போல லோகேஷ் உங்களை பற்றி கூறுவது உங்களுக்கு தெரியுமா என்று மன்சூர் அலி கானிடம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் கேட்டபோது, எனக்கு நன்றாகவே தெரியும். கைதி திரைப்படம் எனக்காக எழுதப்பட்டபோது எப்படி இருந்தது என்று பல நபர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் நானும் லோகேஷும் இதுவரை நேரில் சந்தித்தது கிடையாது. காதல் கோட்டை அஜித் தேவயானி போல் இருக்கிறோம். எனக்கும் மண்டையை போடுவதற்குள் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று தன்னுடைய வழக்கமான நகைச்சுவை பாணியில் பதில் அளித்துள்ளார் மன்சூர் அலி கான்.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!