twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வரூபம் தடையை நீக்கிய ஜெ. அரசு என் படத்தை ஏன் கண்டுக்கல?: டேம் 999 இயக்குனர்

    By Siva
    |

    டெல்லி: கமலின் விஸ்வரூபம் மீதான தடையை வாபஸ் பெற்ற தமிழக அரசு தன்னுடைய டேம் 999 மீதான தடையை மட்டும் நீக்கவே இல்லையே என்று இயக்குனர் சோஹன் ராய் தெரிவித்துள்ளார்.

    விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாகக் கூறி முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து அப்படத்திற்கு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தடை விதித்தது. பின்னர் நீதிமன்றம் வரை போன விவகாரம் கடைசியில் பேசித் தீர்க்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு தடையை வாபஸ் பெற்று இன்று படமும் ரிலீஸாகிவிட்டது.

    இந்நிலையில் டேம் 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை இன்னும் நீக்காதது பற்றி அந்த படத்தின் இயக்குனர் சோஹன் ராய் பேட்டியளித்துள்ளார்.

    டேம் 999 படத்திற்கு தடை

    டேம் 999 படத்திற்கு தடை

    சோஹன் ராய் இயக்கிய டேம் 999 படத்தில் அணை உடைந்து மக்கள் அவதிப்படுவது போன்று காண்பிக்கப்பட்டிருக்கும். படத்தில் முல்லைப் பெரியாறு அணையை சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது, தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து அப்படத்தை தமிழகத்தில் திரையிட அரசு தடை விதித்தது.

    கமலுக்காக சந்தோஷப்படுகிறேன்

    கமலுக்காக சந்தோஷப்படுகிறேன்

    கமல் ஹாசன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் சிறந்த நடிகர், இயக்குனர். அவரின் விஸ்வரூபத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலகியதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் என்னை மட்டும் ஏன் ஒதுக்கிவைத்துவிட்டனர். என் படம் டேம் 999ஐ கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

    எனக்கு நியாயம் வேண்டும்

    எனக்கு நியாயம் வேண்டும்

    கமல் படத்திற்கு விதித்த தடையை வாபஸ் பெற்ற அரசு என் படம் பற்றி இன்னும் ஏன் கண்டுகொள்ளாமலே உள்ளது? நானும் ஒரு மனிதன் தான். எனக்கும் நியாயம் வேண்டும். எனக்கும் கொஞ்சம் நீதி கிடைக்க வேண்டும்.

    English summary
    Dam 999 director Sohan Roy told that he is happy for Kamal as his Vishwaroopam had been cleared by the Tamil Nadu government. My movie Dam 999 should also be permitted to screen in Tamil Nadu. I too deserve justice, he added.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X