பிரபாஸ் போல நானும் SK20-ல் வேற லெவலில்... பட விழாவில் சஸ்பென்ஸை உடைத்த சத்யராஜ்!

சென்னை: பாகுபலி கட்டப்பா கதாபாத்திரத்திற்கு பிறகு தெலுங்கில் சத்யராஜ் நாளுக்கு நாள் மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்த சத்யராஜ் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் புதிய தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்

ஜாதி ரத்னாலு பட இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் இப்படத்தில் சத்யராஜ் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என பட விழாவில் ஒன்றில் சத்யராஜ் கூறியுள்ளார்

கட்டப்பா

கட்டப்பா

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக வெளியான பாகுபலியில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நேர்மையான போர் வீரராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சத்யராஜ். தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக உள்ள இவர் இப்பொழுது அப்பா கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்து வருகிறார். பாகுபலி கட்டப்பா கொடுத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் இவருக்கு மிகப் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் சத்யராஜ் நடித்து வருகிறார்

 சிவகார்த்திகேயன் உடன் காம்போ

சிவகார்த்திகேயன் உடன் காம்போ

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மீண்டும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தெலுங்கில் ஜாதி ரத்னாலு என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக SK20 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

 வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். நடிகர் சத்யராஜ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிகச் சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய கலைஞர். சிவகார்த்திகேயன், சத்யராஜ் காம்போவில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்பொழுது இந்த காம்போ மீண்டும் இந்த படத்தில் இணைந்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபல உக்ரேன் நடிகை கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது.

 பிரபாஸ் அளவிற்கு என்னையும் அழகாக காட்டி

பிரபாஸ் அளவிற்கு என்னையும் அழகாக காட்டி

இந்த நிலையில் பிரபாஸின் ராதேஷ்யாம் பட விழாவில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ் பிரபாஸ் இந்த படத்தில் எந்த அளவிற்கு அழகாக காட்டி உள்ளார்களோ அதே அளவிற்கு SK20 படத்திலும் தன்னை மிகவும் அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. என்னோட கதாபாத்திரம் அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருக்கும். இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் தற்போது SK20ல் நடித்து வருகிறேன் என சத்யராஜ் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து மேடையில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X