twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டோலிவுட்டிற்கு ராஜமெளலி...சாண்டல்வுட்டிற்கு பிரசாந்த் நீல்...அப்போ கோலிவுட்டிற்கு ?

    |

    சென்னை : உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களை இயக்கி, பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார்கள் ராஜமெளலியும், பிரசாந்த் நீலும். தங்களை பிளாக் பஸ்டர் டைரக்டர்களாக சர்வதேச அளவில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

    இந்திய அளவில் முதல் படம் துவங்கி தற்போது வரை தொடர்ந்து வரிசையாக பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வரும் டைரக்டர்களாக உள்ளனர் ராஜமெளலியும், பிரசாந்த் நீலும். இத்தனைக்கும் டாப் ஹீரோக்கள் யாரும் இல்லாமல் சாதாரண ஹீரோக்களை வைத்து பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி, அந்த நடிகர்களை டாப் ஹீரோக்கள் ஆக்கி உள்ளனர்.

    என்ன சொல்றீங்க… KGF 2 எடிட்டருக்கு 19 வயசு தானா?...தெறிக்கவிட்டு இருக்காரே!என்ன சொல்றீங்க… KGF 2 எடிட்டருக்கு 19 வயசு தானா?...தெறிக்கவிட்டு இருக்காரே!

    டோலிவுட்டிற்கு ராஜமெளலி

    டோலிவுட்டிற்கு ராஜமெளலி

    ராஜமெளலி தனது முதல் வரலாற்று படமான மகதீரா படத்தில் ராம்சரணை வரலாற்று ஹீரோவாக நடிக்க வைத்து பிளாக் பஸ்டர் ஹீரோ ஆக்கினார். தொடர்ந்து நான் ஈ படத்தில் ஈயை ஹீரோவாக நடிக்க வைத்து, மற்றொரு பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்து அனைவரையும் அசர வைத்தார். தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் இந்த படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

    பிராண்டாக மாறிய ராஜமெளலி

    பிராண்டாக மாறிய ராஜமெளலி

    பாகுபலி என்ற பிரம்மாண்ட வரலாற்று படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வெற்றி டைரக்டராக உலக அளவில் பிரபலமானார். பாகுபலி 2 படம் 1800 கோடிகளை உலக அளவில் வசூல் செய்தது. இந்த வசூல் சாதனையை இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை. அதிக வசூலை பெற்ற இந்திய படங்களின் பட்டியல் சமீபத்தில் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் உள்ளது. இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்ட 15 நாட்களிலேயே 1000 கோடி வசூலை ஈட்டி உள்ளது. பிரம்மாண்ட இயக்குனர், வெற்றி இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்துள்ளார். ராஜமெளலி படம் என்றால் பிளாக் பஸ்டர் எனும் அளவிற்கு பிராண்டாகி விட்டார் ராஜமெளலி.

     ஒரே படத்தில் டாப் டைரக்டர்

    ஒரே படத்தில் டாப் டைரக்டர்

    இதே போல் கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் உருவெடுத்துள்ளார். இவர் இதுவரை 3 படங்கள் தான் இயக்கி, ரிலீஸ் செய்துள்ளார். அதில் இரண்டு படங்கள் கேஜிஎஃப், கேஜிஎஃப் 2. இந்த இரண்டு படங்களிலேயே கன்னட திரையுலகின் அசைக்க முடியாத டாப் டைரக்டராகி விட்டார். தற்போது பிரபாஸ் நடிக்கும் சாலார் படத்தை இயக்கி வரும் இவர் பகீரா படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளார். இதோடு கேஜிஎஃப் 3 படத்தை இயக்க போவதாகவும் அறிவித்துள்ளார். இவர் இயக்கிய கேஜிஎஃப் சாப்டர் 1 படம் 250 கோடிகளை வசூல் செய்தது.

    சாண்டல்வுட்டுக்கு பிரசாந்த் நீல்

    சாண்டல்வுட்டுக்கு பிரசாந்த் நீல்

    கேஜிஎஃப் இரண்டு பாகங்கள் மட்டுமல்ல பிரசாந்த் இயக்கிய முதல் படமான உக்ரம் படமும் கன்னடத்தில் பிளாக் பஸ்டர் படம் தான். பல தியேட்டர்களில் 150 நாட்கள் ஓடி சாதனை படைத்த படம். ஸ்ரீமுரளி நடித்த ஆக்ஷன் த்ரில்லர் படமான உக்ரம் பாக்ஸ் ஆபீசில் 30 கோடிகளை வசூல் செய்தது.தொட்டதெல்லாம் வெற்றி என்பார்களே அந்த வார்த்தைக்கு மறு பெயர் ராஜமெளலி, பிரசாந்த் நீல் என்றாகி விட்டது.

     கோலிவுட்டில் யாருமில்லையா

    கோலிவுட்டில் யாருமில்லையா

    தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட வெற்றி இயக்குனர் என்றால் ராஜமெளலி, கன்னட திரையுலகிற்கு பிரசாந்த் நீல் உருவாகி விட்டார். தமிழ் திரையுலகில் ஏன் இதுவரை அப்படி ஒரு டைரக்டர் உருவாக வில்லை என்பது சினிமா ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இத்தனை ஆண்டு கால தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு இதுவரை ஒரு சூப்பர் ஸ்டார் கூட உருவாகவில்லை. அதே போல் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா போன்ற டைரக்டர்களுக்கு பிறகு இதுவரை தமிழ் சினிமாவிற்கென தனி அடையாளம் காட்டும் அளவிற்கு ஒரு இயக்குனர் ஏன் இதுவரை உருவாகவில்லை. கோலிவுட்டில் திறமையான இயக்குனர்களே இல்லை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

    இன்னொரு பாலச்சந்தர் வரலியே

    இன்னொரு பாலச்சந்தர் வரலியே

    பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கி, 100 கோடி வசூல் செய்தால் போதும் என்பது தான் தமிழ் சினிமா இயக்குனர்களின் இலக்காக உள்ளதா. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கும், சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத பாகுபலி போன்ற ஒரு படத்தை கூட ஏன் இதுவரை தமிழ் சினிமாவில் உருவாக்கவில்லை. இருக்கும் ஒரு சில டைரக்டர்களும் பெரிய நடிகர்களை வைத்து மட்டுமே படம் இயக்குகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் மாஸை வைத்து 100 கோடி வசூல் காட்டுகிறார்கள். ஆனால் படத்தின் தரம் என்று வருகையில் ஒன்றுமில்லையே என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

    English summary
    Recent back to back block buster movies director Rajamouli as brand for tollywood. On the other hand Prasanth Neel as brand for Sandalwood. But in Kollywood, not a single director as block buster movie director. Fans asked questions that why no one director brought up from kollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X