ஸ்ரீராகவேந்திரா படத்தில் ரஜினிகாந்த் போல ...திருப்பதி வெங்கடாசலபதியாக ஆர்யன் ஷ்யாம்

சென்னை : திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் சார்பாக,"பிரம்மாண்ட நாயகன்" திரைப்படத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

திருப்பதியின் வரலாறு மற்றும் கடவுளாக இருக்கக்கூடிய திருப்பதி வெங்கடாசலபதியின் வாழ்க்கை வரலாறு பற்றிய இரு மொழி திரைப்படம் மாபெரும் கூட்டணியுடன் உருவாகி உள்ளது .

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் ஒருவரான துஷ்மந்த குமார் தாஸ் திரைப்படத்தின் சில காட்சிகளை பார்த்த பிறகு திருப்பதி வெங்கடாசலபதி கடவுளாக நடித்த இளம் நடிகர் ஆரியன் ஷ்யாமை தனிப்பட்ட முறையில் அழைத்து வாழ்த்தினார், மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் சார்பாக ஒரு கடிதத்தை நடிகருக்கு அனுப்பினார் .

 ஸ்ரீராகவேந்திரா படத்தில்

ஸ்ரீராகவேந்திரா படத்தில்

இளம் நடிகர் ஆர்யன் ஷ்யாம் மற்றும் இயக்குனர் ஞானம் பாலசுப்ரமணியம் ( பம்பாய் ஞானம்) மற்றும் பிரம்மாண்ட நாயகன் திரைப்படத்தின் முழு குழுவினருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்கள்.

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவரான துஷ்மந்த குமார் தாஸ். ஆந்திர மாநில ஆளுநர் பிஷ்வ பூஷன் அரிச்சந்திரனின் மருமகன் ஆவார். இளம் நடிகர் ஆர்யாவிக்கு திருப்பதி வெங்கடாசலபதி வேடத்தை ஏற்று நடிக்கும் உத்வேகம் முக்கியமாக எஸ்பி முத்துராமன் இயக்கிய ஸ்ரீராகவேந்திரா படத்தில் ரஜினிகாந்த் அவர்களை பார்த்த பிறகு வந்தது.

 பல அவதாரங்களில்

பல அவதாரங்களில்

"பிரம்மாண்ட நாயகன்" திரைப்படத்தின் இயக்குனர் பம்பாய் ஞானம் பாலசுப்பிரமணியம், ஒளிப்பதிவு ஆனந்த்பாபு, இசை திவாகர் சுப்பிரமணியம், க்ரியேட்டிவ் ஹெட் மோகன் பாபு போன்றவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவாகி உள்ளது .நாயகனாக ஆரியன் ஷ்யாம் நடிக்கிறார். அவர் ஸ்ரீனிவாசன் வேதகன், திருப்பதி பாலாஜி மற்றும் மகாவிஷ்ணு ஆகியோராக பல அவதாரங்களில் நடிக்கிறார்.அதிதி மகாலட்சுமியாகவும், சந்தியா ஸ்ரீ நாக பத்மாவதி தேவியாகவும் நடிக்கிறார்கள் படம் விரைவில் வெளியாக உள்ளது.

 கடைப்பிடித்தால்

கடைப்பிடித்தால்

பொதுவாக தமிழ் சினிமாவில் கடவுளுடைய பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்கள் அதற்காக மிகவும் மெனக்கெட்டு விரதமிருந்து தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் அன்றாடம் செய்யக்கூடிய பல விஷயங்களிலிருந்து மாறுபட்டு சிந்தனையிலும் செயலிலும் புனித தன்மையை அதிகம் கடைப்பிடித்தால் மட்டுமே அந்த தெய்வீக கதாபாத்திரங்கள் செய்யும்பொழுது ஒருவகையான தேஜஸ் ஏற்படும். மிகச்சிறந்த உதாரணமாக கிருஷ்ணர் வேடத்தில் என்.டி.ஆர் நடிப்பு மட்டும்தான் இன்று வரை பலருக்கும் மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது.

 மனதளவில்

மனதளவில்

அதுபோலவே தமிழ் திரைப்படங்களில் நடிகர் திலகம் சிவாஜி ஏற்று நடித்த பல தெய்வீக கதாபாத்திரங்கள் காலத்திற்கும் அழியாதவை .யார் வேண்டுமானாலும் அம்மன் வேஷமிட்டு நடிக்கலாம் யார் வேண்டுமானாலும் கடவுளுடைய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கலாம். ஆனால் மனதளவில் ஒரு வகையான தூய்மை இருந்தால் மட்டுமே அந்த அகத்தின் அழகு முகத்தில் வெளிப்படும் என்று பல இயக்குனர்கள் தொடர்ந்து சொல்லியது உண்டு. அது போல ஆரியன் ஷாம் ஏற்று நடித்த இந்தக் கதாபாத்திரம் காலத்துக்கும் நிற்க வேண்டும் என்று படத்தின் குழுவினர் பலரும் ஆசைப்படுகின்றனர் .பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X