பேட்டி எடுக்கச் சென்ற லதாவை கரம்பிடித்த ரஜினி... இதேபோல் பத்திரிகையாளரை மணந்த நடிகரை தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து லால் சலாம், தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், ரஜினி - லதா ரஜினிகாந்த் காதலித்து திருமணம் செய்துகொண்ட ப்ளாஸ்பேக் தருணங்கள் சில தினங்களாக வைரலாகி வருகின்றன.

இதேபோல், பத்திரிகையாளராக பேட்டி எடுக்கச் சென்றவரை திருமணம் செய்துகொண்ட இன்னொரு நடிகரை பற்றி பலருக்கும் தெரியாது.

 ரஜினி - லதா ரஜினிகாந்த் ஜோடி

ரஜினி - லதா ரஜினிகாந்த் ஜோடி

ஜெயிலரில் நடித்து வரும் ரஜினியின் தலைவர் 170 திரைப்படம் பற்றி நேற்று அபிஸியல் அப்டேட் வெளியானது. ஜெயிலர், லால் சலாம், தலைவர் 170 என பிஸியாக இருக்கும் ரஜினி, அடிக்கடி தனது ப்ளாஷ்பேக் நினைவுகளை பகிர்ந்து வருகிறார். முக்கியமாக லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டதையும் அதன் பின்னணியையும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

 அன்பால் திருத்திய லதா ரஜினிகாந்த்

அன்பால் திருத்திய லதா ரஜினிகாந்த்

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சாருகேசி திரைப்பட விழாவில் பேசியிருந்த ரஜினி, 73 வயது ஆகியும் நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்க காரணம் எனது மனைவி லதா தான் எனக் கூறியிருந்தார். நடத்துனராக வேலைபார்த்த போதே தினமும் குடி, சிகரெட் என வலம் வருவேன். மது, சிகரெட், அசைவம் மூன்றையும் அளவுக்கு மீறி பல வருடங்கள் எடுத்துக் கொண்டவர்கள் 60 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்ந்தது கிடையாது. அப்படி இருந்த என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா என பேசியிருந்தார்.

 பத்திரிகையாளர் லதாவுடன் திருமணம்

பத்திரிகையாளர் லதாவுடன் திருமணம்

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் ரஜினி - லதா காதலித்து திருமணம் செய்துகொண்டது குறித்து பலவிதமான செய்திகள் வெளியாகின. சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த லதா, கல்லூரி விழா மலருக்காக ரஜினியை சந்தித்து பேட்டிக் கேட்டுள்ளார். கல்லூரி மாணவியாகவும் பத்திரிகையாளராகவும் அறிமுகமான லதா மீது ரஜினிக்கு காதல் வந்துள்ளது. அதன் பின்னர் இருவருமே காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 1981ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

 அதேபோல் ஒரு காதல் கதை

அதேபோல் ஒரு காதல் கதை

பத்திரிகையாளராக வந்த லதாவை திருமணம் செய்துகொண்ட ரஜினி, இதுகுறித்து பலமுறை நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். இதேபோல், ஒரு ருசிகரமான சம்பவம் இன்னொரு நடிகருக்கும் நடந்துள்ளது தான் ஆச்சரியமாக உள்ளது. மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிருத்விராஜ். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மேலும் லூசிபர், ப்ரோ டேடி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், இவரது மனைவியும் ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தியாளர் சுப்ரியா மேனன்

செய்தியாளர் சுப்ரியா மேனன்

மலையாள பழம்பெரும் நடிகரான சுகுமாரனின் மகன் தான் பிருத்விராஜ். இவரை பேட்டி எடுப்பதற்காக பிபிசி செய்தி நிறுவனத்தில் இருந்து சந்தித்துள்ளார் சுப்ரியா மேனன். பேட்டிக்காக சந்தித்த தருணத்தில் பிருத்விராஜுக்கும் சுப்ரியா மேனனுக்கும் காதல் வரவே, இருவரும் 2011ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். ரஜினியிடம் பேட்டி எடுக்கச் சென்ற லதா அவருக்கு மனைவி ஆனதை போல, பிருத்விராஜ்ஜை பேட்டி எடுக்கச் சென்ற சுப்ரியாவும் அவருக்கு மனைவியானது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X