Don't Miss!
- Finance
4 மாற்றங்கள்.. வருமான வரியில் இதைத் தாண்டி எதுவும் கிடைக்காது.. அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்..!
- News
"டார்கெட்".. 9 மாநிலம் + 2024 நாடாளுமன்ற தேர்தல்.. பட்ஜெட் 2023ல் வரப்போகும் "மெகா" அறிவிப்புகள்?
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூர்யா போல கார்த்தியும் தேசிய விருது வாங்கணும்.. மேடையில் ஆசையை கூறிய இயக்குநர் ஷங்கர்!
சென்னை: சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள விருமன் திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது .
விருமன் திரைப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரன், சரண்யா பொன்வண்ணன் போன்ற பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கர்,தனது ஆசையை வெளிப்படையாக கூறியுள்ளார்.
புதுச்சேரியில்
கடலுக்கு
100
அடியில்
பேனர்..அஜித்துனா
சும்மாவா..மாஸ்
காட்டிய
ரசிகர்கள்!

தெறிக்க விடும் ட்ரைலர்
விருமன் திரைப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விருமன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ சமீபத்தில் வெளியானது. கிராமத்து கதையாக உருவாக்க பட்டிருக்கும் இப்படத்தில் காதல், செண்டிமெண்ட், சண்டை காட்சிகள் முழு எண்டெர்டைன்மெண்ட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்து கதைக்களமாக இருப்பதால் விருமன் திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சூப்பர் ஹிட் நிச்சயம்
சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் இந்த படத்திற்கு ஷங்கர் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் பிரமாண்டமாக மதுரையில் நடைபெற்ற ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, சூர்யா, கார்த்தி, ஷங்கர் என்று அனைவரும் கலந்து கொண்டனர். ஏற்கனவே பல கிராமத்து கதைகளில் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கும் கார்த்திக்கு இந்த படம் பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய விருது வாங்கணும்
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் கலகலப்பாக பேசினர். தனது மகளின் முதல் படம் என்பதால் இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் மேடையில் இயக்குநர் ஷங்கர் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஷங்கர் பேசியிருப்பதாவது கார்த்தி ஒரு தரமான நடிகர், அவரை ஸ்கிரீனில் பார்த்தாலே மனதில் ஒட்டிக் கொள்ளும் மாதிரியான ஒரு நடிகர். அவர் கூட அதிதி நடிப்பது எனக்கு மிகவும் சந்தோஷம். அவரது அண்ணன் சூர்யாவைப் போல் தேசிய விருது வாங்க என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார்.

வித்தியாசம் காட்டும் யுவன்
படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகவும் அற்புதமாக இருக்கிறது, எப்பொழுதும் யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு வித்தியாசம் இருந்து கொண்டே இருக்கின்றது. ஃபோக் சாங், வில்லேஜ் பாடல் என்று பல பாடல்கள் வந்துள்ளது. ஆனால் இவரது இசை ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமாக இருக்கிறது. வித்தியாசமாக இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பேசியுள்ளார் சங்கர்.