விஜய் கட்சி மாதிரி என் நிலைமை ஆகிடுச்சே.. அவங்களுக்கு 108 பத்தல.. +2 மாணவர் டப்புனு உடைச்சிட்டுப்பாரு
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக மொத்தம் 108 தொகுதிகளை வென்றிருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 118 கிடைக்கவில்லை என்பதால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்கப்பட்டது. காங்கிரஸ் மட்டும்தான் எடுத்ததுமே தனது ஆதரவை கொடுத்துவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் நீண்ட யோசனைக்கு பிறகு ஆதரவு தெரிவித்தன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குழப்பமாகவே வந்திருக்கின்றன. தவெக 108 தொகுதிகளை வென்றாலும் அது வாங்கிய வாக்கு சதவீதத்துக்கும், திமுக கூட்டணி வாங்கிய வாக்கு சதவீதத்துக்கும் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே அதிகம். இருப்பினும் அதிக தொகுதிகளை வென்றதன் காரணமாக தவெகதான் ஆட்சியமைக்க வேண்டும். அதற்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார், பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் கேட்ட இரண்டு வார அவகாசத்தை கொடுத்து; நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆளுநரின் ஆட்டம்: ஆனால் ஆளுநர் அர்லேகரே இப்போதே விஜய் 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கேட்க வேண்டும் என கூறினார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தார்கள். தவெகவோ மற்ற கட்சிகளிடம் தனக்கான ஆதரவை கேட்கும் வேலைகளில் இறங்கியது. காங்கிரஸ் உடனடியாக ஆதரவை வழங்க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவை நீண்ட யோசனைக்கு பிறகு ஒருவழியாக வழங்கிவிட்டார்கள். இதன் காரணமாக அதன் பலம் இப்போது 120ஆக இருக்கிறது.
மீண்டும் ஆளுநரின் ஆட்டம்: தேவையான பெரும்பான்மை கிடைத்துவிட்டதால் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்ககோரி நான்காவது முறையாக ஆளுநரை சந்திக்க ஆசையோடு புறப்பட்டார் விஜய். ஆனால் அவர் பாதி வழியில் சென்றுகொண்டிருக்கையில்; ஆளுநரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை என்ற தகவல் வந்ததை அடுத்து மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். இன்று இரவு அர்லேகர் கேரளா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. நாளை தமிழ்நாட்டில் இருக்கமாட்டார். அநேகமாக அடுத்த வாரத்தில் விஜய் முதலமைச்சராக பதவியேற்பார் என்று தெரிகிறது.
ட்ரெண்டாகும் மாணவனின் பேட்டி: இத்தனை அரசியல் களேபேரங்களுக்கு மத்தியில் நேற்று +2 பொது தேர்வு முடிவுகள் வந்தன. இந்நிலையில் தேர்வில் 600க்கு 579 மதிப்பெண்கள் எடுத்த்ரிஉக்கும் திருப்பத்தூரை சேர்ந்த பிரவீன் என்ற மாணவர் செய்தியாளரிடம் பேசுகையில், "என்னுடைய பெயர் பிரவீன் குமார். நான் எல்கேஜியிலிருந்தே ஒரே பள்ளியில்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். நான்தான் முதலிடம். ஆனாலும் எனக்கு மதிப்பெண் இன்னும் கொஞ்சம் அதிகம் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
தவெக மாதிரி ஆகிப்போச்சே: எப்படி விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களில் வென்றும் பற்றவில்லையோ அதேமாதிரி நானும் இன்னும் கொஞ்சம் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். படிக்கும்போது எப்போ எப்போ எதை படிக்க வேண்டுமோ அதை படித்துவிட வேண்டும். உடல்நிலையும் முக்கியம். இந்த பள்ளியின் ஆசிரியர்களும், ஆசிரியைகலும் மாணவ, மாணவிகளுக்கு இன்னொரு பெற்றோராக இருந்து கவனித்துக்கொண்டார்கள். மார்க் எவ்வளவு அதிகம் இருக்கிறதோ அந்த அளவுக்கு வாழ்க்கையில் செட்டில் ஆகலாம்" என்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
