லிங்கா நாயகி சோனாக்ஷிக்கு பிறந்தநாள்: ரஜினி என்ன பரிசு கொடுத்தார்?
சென்னை: லிங்கா படத்தில் நடித்து வரும் சோனாக்ஷி சின்ஹா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பாலிவுட்டில் வெற்றி நாயகியாக இருக்கும் சோனாக்ஷி சின்ஹா ரஜினிகாந்தின் லிங்கா படம் மூலம் கோலிவுட் வருகிறார்.
அவர் தற்போது லிங்கா படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

பிறந்தநாள்
சோனாக்ஷி சின்ஹா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு நண்பர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஸ்டார் மகள்
சோனாக்ஷி பாலிவுட்டில் பெரிய நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். இருப்பினும் அவர் படப்பிடிப்பில் எந்தவித பந்தாவும் செய்யாமல் நடிப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.

சைஸ் ஜீரோ
பாலிவுட்டில் சைஸ் ஜீரோ, பென்சில் போன்று நடிகைகள் ஒல்லிக்குச்சியாக இருக்க சோனாவோ அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பூசினாற் போன்ற உடல்வாகுடன் நடித்து வருகிறார்.

குடும்பம்
சோனாக்ஷி எந்த படத்தை தேர்வு செய்தாலும் தனது குடும்பத்தாரிடம் ஆலோசித்த பிறகே தேர்வு செய்வார். அவரது நடிப்பை விமர்சித்து குறை, நிறைகளை கூறுவது வேறு யாரும் அல்ல சோனாவின் அம்மா தான்.

சர்ச்சைகள்
சோனாக்ஷி தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பார். எந்த சர்ச்சையிலும் சிக்காமல் உள்ள நடிகை அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிண்டல்
சோனாக்ஷியின் உடல் எடை மற்றும் பெரிய நெற்றி பற்றி பலர் கிண்டல் செய்தும் அவர் அதை எல்லாம் காதில் வாங்காமல் நான் இப்படி தான் என்று தில்லாக இருப்பது பல பெண்களுக்கு அவர் மீது மரியாதை ஏற்பட காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications











