twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் நாளை முதல் லிங்கா அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பம்!

    By Shankar
    |

    ரஜினியின் லிங்கா படத்துக்கு நாளை செவ்வாய்க்கிழமை 9-ம் தேதியிலிருந்து அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமாகிறது. முக்கிய மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் நாளை முன்பதிவு செய்யப்படுகிறது.

    ரஜினியின் ‘லிங்கா' படம் வருகிற 12-ந் தேதி ரிலீசாகிறது. ரஜினி பிறந்த நாளும் அதே தினத்தில் வருவதால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் பட ரிலீசைக் கொண்டாடத் தயாராகிறார்கள்.

    ‘லிங்கா' திரையிடப்படும் திரையரங்குகளில் ரஜினி கட்- அவுட்கள் அமைக்கின்றனர். கொடி தோரணங்களும் கட்டுகிறார்கள்.

    நேற்று முதல் ரத்ததானம், கண் தானம், ஏழைகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிகளைத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.

    ‘லிங்கா' இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 5000 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. தமிழகம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் 1000 தியேட்டர்களில் படம் வெளியாகவிருக்கிறது. கேரளாவில் தமிழ்ப் படம் ஒன்று இத்தனை அரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை. நேரடி மலையாளப் படங்கள் வெளியாகும் அரங்குகளை விட இருமடங்கு அதிக அரங்குகளில் லிங்கா வெளியாகிறது.

    ஹைதராபாத், பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களில்மட்டும் 400 அரங்குகளில் லிங்கா வெளியாகிறது. புனே, கோவா, டெல்லி, அகமதாபாத், சண்டிகர், கொல்கத்தா, பாட்னா போன்ற நகரங்களிலும் லிங்கா வெளியாகிறது.

    தமிழகத்தில் ‘லிங்கா' படத்துக்காக அனைத்து தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு உள்ளதால் இதர படங்கள் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். அமெரிக்காவில் 328 அரங்குகளில் லிங்கா தமிழ் - தெலுங்கு பதிப்புகள் வெளியாக உள்ளன. இங்கு நேற்றே முன்பதிவும் ஆரம்பமாகிவிட்டது.

    வெளிநாடுகளில்

    இங்கிலாந்தில் 85 தியேட்டர்களிலும், பிரான்சில் 50 தியேட்டர்களிலும், டென்மார்க்கில் 20 தியேட்டர் களிலும் திரையிடப்படுகிறது. ஜெர்மனியில் 16 தியேட்டர்களிலும், ஹாலாந்தில் 9 தியேட்டர்களிலும், சுவிட்சர்லாந்தில் 6 தியேட்டர்களிலும், நார்வேயில் 4 தியேட்டர்களிலும், பெல்ஜியத்தில் 3 தியேட்டர்களிலும், சுவீடன் நாட்டில் 2 தியேட்டர்களில் லிங்காவை திரையிட ஒதுக்கி உள்ளனர். வெளிநாடுகளில் இதற்கு முன் ரஜினியின் எந்த படமும் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது இல்லை என்கின்றனர்.

    ஆஸ்திரேலியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, அரபு நாடுகள், தென்னாப்பிரிக்கா, கானா போன்ற நாடுகளிலும் லிங்கா வெளியாகிறது. அங்கு எத்தனை அரங்குகள் என்ற விவரம் வெளியாகவில்லை. ஜப்பானிலும் லிங்காவை அதிக அரங்குகளில் வெளியிடுகின்றனர்.

    தமிழ் நாட்டில் அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவுகள் நாளை முதல் துவங்குகிறது. முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். பல தியேட்டர்களிலும் நள்ளிரவு 1 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி துவங்குகிறது. காசி, வெற்றி, ஏஜிஎஸ் போன்ற அரங்குகளில் ஏற்கெனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கூட்டத்தைக் கட்டுபடுத்த தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    English summary
    The Advance booking of Rajinikanth's Lingaa will begin from Tomorrow all over the state.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X