தீபாவளிக்கு ரஜினியின் லிங்கா இசை... தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தீபாவளி தினத்தில் ரஜினியின் லிங்கா படத்தின் இசை வெளியாகும் என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதன் பெரும்பகுதி காட்சிகள் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டன.

தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில் முழுப் படமும் முடிந்து விடும். இரு பாடல் காட்சிகளுக்காக ரஜினி, சோனாக்ஷி மற்றும் அனுஷ்கா உள்ளிட்ட படக்குழுவினர் ஐரோப்பா செல்கிறார்கள்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் டப்பிங் வேலைகள் துவங்குகின்றன.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், 'லிங்கா படம் சிறப்பாக வந்துள்ளது. தீபாவளிக்கு பாடல்கள் வெளியிடப்படும்," என்றார்.
ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதி லிங்கா படம் ரிலீசாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











