ரஜினி பிறந்த நாளில் லிங்கா படம் வெளியாகும்!- தயாரிப்பாளர்

By Shankar

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி இருவேடங்களில் நடிக்கும் லிங்கா படம் அவர் பிறந்த தினமான டிசம்பர் 12-ல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் லிங்கா. இத்திரைப்படத்தில் ஒரு ரஜினிக்கு சோனாக்ஷியும் இன்னொரு ரஜினிக்கு அனுஷ்காவும் கதாநாயகியாக நடிக்கின்றனர்.

இர்வின் லாரன்

இர்வின் லாரன்

மேலும் ஒரு நாயகியாக ஹாலிவுட்டிலிருந்து இர்வின் லாரன் அறிமுகமாகிறார். ஒரு பாடலுக்கு நயன்தாரா ஆடுகிறார். காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 40 நாட்கள் மைசூரிலும், கடந்த இரு வாரங்களாக ஹைதராபாதிலும் நடந்து வருகிறது. இந்த 60 நாட்களிலும் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

வெற்றிக் கூட்டணி

வெற்றிக் கூட்டணி

ரஜினியும் ரவிக்குமாரும் மூன்று படங்களில் இதுவரை இணைந்துள்ளனர். முத்து, படையப்பா மற்றும் கோச்சடையான் என மூன்றுமே பெரும் வெற்றிப் படங்கள். கோச்சடையானை இயக்கியவர் சவுந்தர்யா ரஜினி என்றாலும், அந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவர் கேஎஸ் ரவிக்குமார்தான்.

பெரும் விலை

பெரும் விலை

இந்த கூட்டணி எப்போதுமே வெற்றிக் கூட்டணி என்பதால், லிங்கா படத்தை பெரும் விலைக்கு வாங்க, தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் பிறந்த தினத்தில்

சூப்பர் ஸ்டார் பிறந்த தினத்தில்

லிங்காவை வரும் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இப்போது அதில் ஒரு மாற்றம். சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி இந்தப் படத்தை உலகெங்கும் வெளியிடப் போகிறார்கள். இதனை படத்தின் தயாரிப்பாளரே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X