சென்சார் ஆனது லிங்கா... எந்த வெட்டும் இல்லாமல் யு சான்றிதழ்!
சென்னை: ரஜினியின் லிங்கா படம் நேற்று சென்சார் ஆனது. எந்த காட்சியும் நீக்கப்படாமல் சுத்தமான யு சான்று கிடைத்துள்ளது படத்துக்கு.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இருவேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி, அனுஷ்கா நடித்துள்ள லிங்கா படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தை நேற்று சென்சாருக்கு அனுப்பினர். படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தின் எந்தக் காட்சிக்கும் ஆட்சேபம் தெரிவிக்காமல் யு சான்றளித்தனர்.
இந்தப் படம் 2 மணி 54 நிமிடங்கள் ஓடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது கிட்டத்தட்ட படையப்பா படத்துக்கு சமமான நீளம் என்பது குறிப்பிடத்தக்கது.
லிங்காவுக்கு சென்சார் சான்று கிடைத்துவிட்டதால், ரஜினி பிறந்த நாளன்று படம் வெளியாவது நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications