முதல் நாளே ரூ. 37 கோடி வசூல்: அமெரிக்காவில் கோச்சடையான், கத்தியை முந்திய லிங்கா
சென்னை: உலக அளவில் ரிலீஸான அன்றே லிங்கா படம் ரூ.37 கோடி வசூல் செய்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த லிங்கா படம் அவரது பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. படம் சூப்பர் என்றும், சுமார் என்றும் கூறப்பட்டுள்ளபோதிலும் வசூலில் சாதனை படைத்துள்ளது.
லிங்காவின் வசூல் விவரம் வருமாறு,

இந்தியா
லிங்கா ரிலீஸான அன்று தமிழகத்தில் ரூ.12.8 கோடியும், ஆந்திராவில் ரூ.5 கோடியும், கேரளாவில் ரூ.1.6 கோடியும், கர்நாடகாவில் ரூ.2.1 கோடியும், இந்தியாவின் மீதமுள்ள பகுதிகளில் ரூ.50 லட்சமும் வசூல் செய்துள்ளது. ஆக இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.22 கோடி வசூலித்துள்ளது என்று ஆந்திராபாக்ஸ் ஆபீஸ் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில்
லிங்கா அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறதாம். படம் ரிலீஸ் ஆன அன்று மட்டும் வெளிநாடுகளில் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளது. லிங்கா ரிலீஸான அன்று மட்டும் உலக அளவில் ரூ.37 கோடி வசூல் செய்துள்ளது.

ஹேப்பி நியூ இயர்
ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர், அஜய் தேவ்கனின் சிங்கம் ரிட்டர்ன்ஸ், ரித்திக் ரோஷனின் பேங் பேங் மற்றும் சல்மான் கானின் கிக் ஆகிய படங்களை அடுத்து ஒரே நாளில் அதிகம் வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை லிங்கா பெற்றுள்ளது.

அமெரிக்கா
அமெரிக்காவில் இதுவரை நல்ல வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் பட்டியலில் லிங்கா சேர்ந்துள்ளது. அமெரிக்காவில் இரண்டு நாட்களில் லிங்கா ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது.

கத்தி
அமெரிக்காவில் வசூலில் லிங்கா விஜய்யின் கத்தி மற்றும் கோச்சடையான் படங்களை முந்தியுள்ளது. விரைவில் லிங்கா ரூ.100 கோடி கிளப்பில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











