ரஜினியுடன் ஸ்காட்லாந்து செல்கிறது லிங்கா படக்குழு
ஷிமோகா - ஹைதராபாதில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பை முடித்த லிங்கா குழு, அக்டோபர் முதல் வாரம் பாடல் காட்சிக்காக ஸ்காட்லாந்து செல்கிறது.
ஷிமோகாவிலும் ஹைதராபாதிலும் மட்டும் 42 நாட்கள் லிங்காவின் இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்டன. நூறு நாட்களையும் தாண்டிவிட்டது மொத்த படப்பிடிப்பும்.

இன்னும் இரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டும். ஒன்று ரஜினியும் அனுஷ்காவும் பாடுவது. இந்தக் காட்சியை ஸ்காட்லாந்தில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தன் குழுவுடன் லொகேஷன் பார்க்கக் கிளம்பிவிட்டார்.
இந்தப் படப்பிடிப்பு இரு வாரங்களுக்குள் முடிந்துவிடும். தீபாவளிக்கு படத்தின் பாடல்களை வெளியிட வேண்டும் என்பதால் இசையமைப்புப் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார் ஏ ஆர் ரஹ்மான்.
ரஜினியின் பிறந்த நாளன்று படத்தை வெளியிடுவதில் உறுதியாக உள்ளார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்.


Click it and Unblock the Notifications











