twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியின் 'லிங்கா'வுக்கு அடுத்தடுத்து கிளம்பும் எதிர்ப்புகள்

    By Siva
    |

    சென்னை: ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்திற்கு அடுத்தடுத்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

    கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் லிங்கா. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    லிங்கா படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து அது பல எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

    மைசூர்

    மைசூர்

    லிங்கா படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மைசூரில் துவங்கியது. அப்போது ரஜினிகாந்தின் படப்பிடிப்பை இங்கு நடத்தக் கூடாது என்று கூறி சில கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின.

    கொடும்பாவி

    கொடும்பாவி

    லிங்கா படப்பிடிப்பை எதிர்த்து போராடியவர்கள் ரஜினியின் கொடும்பாவியை எரித்தனர். காவிரி பிரச்சனையில் ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசியது தான் இந்த எதிர்ப்புக்கு காரணம்.

    ஹைதராபாத்

    ஹைதராபாத்

    லிங்கா படக்குழு மைசூரில் இருந்து ஹைரதாபாத் சென்றது. ஹைதராபாத் அருகே உள்ள அனஞ்பூர் என்னும் கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தபோது ரசாயனம் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு செட் போட்டுள்ளனர். அந்த ரசாயனங்கள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கலந்துள்ளது.

    மக்கள் போராட்டம்

    மக்கள் போராட்டம்

    லிங்கா படத்திற்காக போடப்பட்ட செட்டால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன என்று கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

    ஷிமோகா

    ஷிமோகா

    லிங்கா படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் நடைபெறுகிறது. ஷிமோகா மாவட்டத்தில் உள்ள லிங்கனமக்கி அணை அருகே படப்பிடிப்பை நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    சித்தராமையா

    சித்தராமையா

    லிங்கனமக்கி அணை அருகே நடத்தப்படும் லிங்கா படப்பிடிப்பை நிறுத்தக் கோரியும், அங்கு எடுக்கப்பட்டுள்ள படத்தின் ரீல்களை பறிமுதல் செய்யக் கோரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கார்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

    English summary
    Rajinikanth starrer Lingaa is facing protests after protests right from the beginning.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X