ரஜினியின் லிங்கா நவம்பர் 24-ம் தேதி சென்சார் செல்கிறது!
சென்னை: ரஜினியின் லிங்கா படம் டிசம்பர் 12-ம் தேதி அவரது பிறந்த நாளுக்குத் தயாராகிறது.
படம் இந்தத் தேதியில் வெளியாவது உறுதி என்றாலும், சென்சார் முடியும் வரை எதையும் வெளியில் சொல்ல மாட்டேன் என்று லிங்கா இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.
இப்போது படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. நவம்பர் 24-ம் தேதி, அதாவது திங்களன்று இந்தப் படத்தை சென்சார் குழுவினர் பார்க்கின்றனர்.
சென்சார் சான்றிதழ் பெற்றபிறகு வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
லிங்காவின் அனைத்து ஏரியாக்களும் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டன. தொலைக்காட்சி உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications
