லிங்கா படம் 10 படையப்பாவுக்கு சமம்: இயக்குநர் ஷங்கர்

By Mayura Akilan

லிங்கா படம் பத்து படையப்பாவுக்கு சமம் என்று இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

லிங்கா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடலாசியர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

ரஜினியின் மனிதநேயம்

ரஜினியின் மனிதநேயம்

ரஜினி மனிதநேயம் உள்ளவர் என்று இயக்குநர் முத்துராமன் தெரிவித்தார். அவரது உள்ளத்தில் பொய் இல்லை அதனால்தான் உலகத்தில் உள்ளவர்களின் மனதில் வாழ்கிறார். இந்த படத்தின் வெற்றி விழாவையொட்டி ரசிகர்களை ரஜினி சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

ரஜினிக்கு தெரியும்

ரஜினிக்கு தெரியும்

விழாவில் பேசிய வைரமுத்து, ரஜினி மனதை யாராலும் அளக்க முடியாது என்றார். இங்கு பேசியவர்கள் ரஜினியை தலைவர் என்றனர். கடவுள் என்றனர். தெய்வம் என்றனர். இப்படி புகழ்ந்து பேச அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற திறமை ரஜினியிடம் மட்டும்தான் இருக்கிறது என்றார்.

திணிக்க முடியாது

திணிக்க முடியாது

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று கால் நூற்றாண்டுகளாக விவாதம் நடக்கிறது. எந்த முடிவையும் அவர் மீது திணிக்க முடியாது. அவர் முடிவு எடுத்தால் அதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

பிரம்மாண்ட படம்

பிரம்மாண்ட படம்

பிரம்மாண்ட இயக்குனர் என்று என்னை எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், லிங்கா படத்தின் டிரெயிலர், பாடல்களை பார்த்தபிறகு இதுதான் பிரம்மாண்டமாக இருக்கிறது என்று இயக்குனர் ஷங்கர் கூறினார்.

பத்து படையப்பா

பத்து படையப்பா

ஒரு படத்தை எவ்வளவு சீக்கிரம் எடுக்க வேண்டும் என்பதை கே.எஸ்.ரவிக்குமாரிடம் கற்றுக் கொள்ளவேண்டும். ‘லிங்கா' படம் பத்து படையப்பாவுக்கு சமம் என்றும் புகழ்ந்தார் ஷங்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X