டிச 12-ல் தமிழ், தெலுங்கு, இந்தியில் 5000 திரையரங்குகளில் லிங்கா - தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ்
சென்னை: ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி லிங்கா படம் 5000 அரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இன்று அறிவித்துள்ளார்.
கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள லிங்கா படம் நேற்று சென்சார் ஆனது. 3 மணி நேரப் படமான லிங்காவுக்கு, எந்த வெட்டுமில்லாமல் க்ளீன் யு சான்று அளித்துள்ளனர்.

திட்டமிடல்
ரிலீசுக்கு இன்றும் 17 நாட்கள் உள்ள நிலையில், லிங்கா படம் சென்சார் சான்றிதழ் பெற்றது திரையுலகில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் மகிழ்ச்சியையும், திட்டமிட்டு ஒவ்வொரு பணியையும் முடித்து வருவதற்காக லிங்கா குழுவுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

கேளிக்கை வரி விலக்கு
படத்துக்கு கேளிக்கை வரி விலக்குப் முன்கூட்டி தணிக்கை பெற்றுள்ளது பெரிதும் உதவியாக இருக்கும் என்று திரை வர்த்தகத் துறை நம்புகிறது.

ரூ 100 கோடி
இந்தப் படத்தின் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் லிங்கா. ரசிகர்கள் உணர்வுப் பூர்வமாக ரசிக்கும் படமாக வந்திருக்கிறது.

5000 அரங்குகள்
லிங்காவை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகெங்கும் 5000 அரங்குகளில் வெளியிடவிருக்கிறோம். சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் லிங்காவை பார்த்து மகிழலாம்," என்றார்.


Click it and Unblock the Notifications











