டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் லிங்கா... நவம்பர் இறுதியில்சென்சார்!

By Shankar

ரஜினியின் லிங்கா திரைப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி அவரது பிறந்த நாளில் வெளியாவது நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இருவேடங்களிலும், அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடித்துள்ள படம் லிங்கா.

இந்தப் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.

Lingaa release date confirmed

படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியிட வேண்டும் என்பதுதான் கே எஸ் ரவிக்குமாரின் முதல் நோக்கம். ஆனால் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் கூடுதல் நேரம் எடுத்ததால், கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை வெளியிடலாம் என யோசித்து வந்தனர்.

அதனால்தான் லிங்கா இசை வெளியீட்டு விழாவில் கூட, ரிலீஸ் தேதியை இப்போது சொல்ல மாட்டேன் என்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்தார்.

இப்போது அனைத்து வேலைகளும் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டன. எனவே இ்ம்மாத இறுதியில் படத்தை சென்சாருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

எனவே படத்தை ரஜினி பிறந்த நாளன்றே வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X