லிங்கா... அடுத்த ஷெட்யூல் ஹைதராபாதில்.. ரஜினியுடன் அனுஷ்கா டூயட்!
ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் 26-ம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த மே 2-ம் தேதி மைசூரில் தொடங்கியது லிங்கா படப்பிடிப்பு. ரஜினி இதில் இரு வேடங்களில் நடிக்கிறார்.

விடுதலைக்கு முந்தைய இந்தியா
நாடு விடுதலை அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. இதில் ரஜினியும் சோனாக்ஷி சின்ஹாவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் மைசூர் அரண்மனை, ஸ்ரீரங்கப்பட்டினம், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டன. அருகில் உள்ள ஒரு அணைக்கட்டிலும் காட்சிகள் எடுக்கப்பட்டன.

அடுத்த ஷெட்யூல்
அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் மே 26-ம் தேதி ஹைதராபாதில் தொடங்கும் என்று தெரிகிறது. இந்தப் படப்பிடிப்புக்காக பெரும் செட் ஒன்றை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டு வருகிறது.

அனுஷ்கா
இந்த இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் ரஜினியுடன் அனுஷ்கா இணைகிறார். படத்தில் மகனாக வரும் இளவயது ரஜினியுடன் அனுஷ்கா டூயட் பாடுகிறார்.

எத்தனை நாட்கள்?
ஹைதராபாதில் எத்தனை நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மூன்றாவது கட்டப் படப்பிடிப்பும் இருக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











