ஹைதராபாதில் ஒரு பாட்டு... பிரான்ஸ், ஹாங்காங்கில் ஒரு பாட்டு! - லிங்கா அடுத்த ஷெட்யூல்
ரஜினியின் அடுத்த படமான லிங்காவின் பாடல் காட்சிகள் இன்னும் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதுவும் இரண்டு பாடல்கள்தான்.
இந்த இரண்டில் ஒரு பாடலை ஸ்காட்லாந்தில் எடுக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது அதில் ஒரு மாற்றம்.

ஒரு பாடலை ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலேயே செட் போட்டு படமாக்குகிறார்கள். ரஜினியும் சோனாக்ஷி சின்ஹாவும் ஆடும் டூயட் இது.
இன்னொரு பாடலை மட்டும் ப்ரான்ஸ், ஹாங்காங் மற்றும் மக்காவோவில் படமாக்கப் போகிறாராம் கே எஸ் ரவிக்குமார். எஸ்பிபி பாடும் ரஜினியின் அறிமுகப் பாடலாம் இது.
ரஜினிக்கான அறிமுகப் பாடலை வெளிநாடுகளில் படமாக்குவது இதுவே முதல் முறை.
Comments


Click it and Unblock the Notifications