லிங்கா கதை வழக்கில் ரஜினி, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட 11 பேருக்கு நோட்டீஸ்

By Shankar

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லிங்கா' படத்தை வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவைச் சேர்ந்த 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

லிங்கா படத்தின் கதை தன்னுடையது என்று கோரி மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ரவி ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

Lingaa story case: HC ordered to send notice to Rajini and crew

அதில் தனது முல்லைவனம் 999 என்ற கதையைத்தான் லிங்கா என எடுத்துவிட்டதாக அவர் புகார் கூறியிருந்தார்.

2014 பிப். 24-ல் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் 'முல்லைவனம் 999' படத்துக்கான பூஜை நடைபெற்றதாகவும், 2015 ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்கவும், தமிழ் வருட பிறப்பு அன்று வெளியிடவும் முடிவு செய்திருந்ததாகவும், அதற்குள் அந்தக் கதையைத் திருடிவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ரஜினிகாந்த் மற்றும் லிங்கா படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடும்போது, படத்தின் பாடல் வெளியீட்டுக்கு சில நாட்களே உள்ளன. எனவே, தடை விதிக்க வேண்டும் என்றார்.

எதிர் மனுதாரர்களிடம் கருத்துகளை கேட்காமல் தடை விதிக்க முடியாது என நீதிபதி கூறியதை அடுத்து, டிஜிபி, தென் மண்டல ஐஜி, மதுரை மாநகர் காவல் ஆணையர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர், மத்திய அரசு சினிமா பிரிவு முதன்மை தயாரிப்பாளர் மற்றும் லிங்கா படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன்குமார், தியேட்டர் உரிமையாளர் கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நவ. 19-க்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X