ரஜினி ஒரு திறந்த புத்தகம் : லிங்கா இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

By Mayura Akilan

ரஜினியை பொறுத்தவரை அவருக்கு வயது குறைந்துகொண்டே இருக்கிறது. அவர் ஒரு திறந்த புத்தகம் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.

‘லிங்கா' படத்தில் ரஜினி இருவேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார் கூறியதாவது:

பெயர் வைத்த ரஜினி

பெயர் வைத்த ரஜினி

இந்த படத்துக்கு ‘லிங்கா' என்று பெயர் வைத்ததே ரஜினிதான். கமல் நடித்த ‘தெனாலி' படத்துக்கும் பெயர் வைத்தது ரஜினிதான்.

‘லிங்கா' பட தலைப்பை ரஜினி சொன்னதும் அமீர் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவரிடம் கேட்டோம். தலைவன் கேட்கும்போது தர முடியாது என்று சொல்ல முடியாது என கூறி உடனே பட தலைப்பை எங்களுக்கு தந்தார்.

திறந்த புத்தகம்

திறந்த புத்தகம்

ரஜினி ஒரு திறந்த புத்தகம். அவர் ஒவ்வொரு காரியத்திலும் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதற்கு ஷூட்டிங்கில் நடந்த ஒரு விஷயத்தை வைத்து சொல்ல முடியும்.

டான்ஸ் ஆட முடியுமா?

டான்ஸ் ஆட முடியுமா?

இந்த படத்தின் அறிமுக பாடலுக்கு பிருந்தா நடனம் அமைத்து கொடுத்தார். அதை பார்த்த ரஜினி 25 வயதுக்காரர் ஆடுற மாதிரி நடனம் சொல்லிக் கொடுக்கிறீங்களே. என்னால் எப்படி ஆடமுடியும் என்று கேட்டார் பிறகு வேறு ஸ்டைலில் நடனம் அமைக்கப்பட்டு ரஜினி ஆடினார்.

மனதை புண் படுத்த மாட்டார்

மனதை புண் படுத்த மாட்டார்

யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்று நினைப்பவர் ரஜினி. அவர் நினைத்திருந்தால் ஆடமுடியாது என்று வேறு மாதிரி சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை.

இளம் வயது நாயகிகள்

இளம் வயது நாயகிகள்

கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்கா, அனுஷ்காவை தேர்வு செய்ததை அறிந்ததும் இவ்வளவு குறைவான வயதுள்ளவர்களை ஜோடியாக்குகிறீர்களே என்றார். சோனாக்ஷி அப்பா என் நண்பர் என்றார்.

இளமையான ரஜினி

இளமையான ரஜினி

ரஜினியை பொறுத்தவரை அவருக்கு வயது குறைந்துகொண்டே இருக்கிறது. அவரை விட இளமையான ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியானார். பின்னர் 24 வயது கொண்ட தீபிகா படுகோனேவுடன் ஜோடி சேர்ந்தார். இப்போது 22 வயதான சோனாக்ஷி சின்கா ஜோடியாகியுள்ளார். ரஜினியுடன் நடிக்கும் கதாநாயகிகளுக்கும் வயது குறைந்து கொண்டே போகிறது என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X