லிங்கா…. ட்ரெயிலரே சும்மா அதிருதில்ல!

By Mayura Akilan

நான் எந்த வேலையா இருந்தாலும் என் மனசுக்கு புடிச்சாதான் செய்வேன் இது லிங்காவில் சூப்பர் ஸ்டார் பேசும் வசனம்.
படம் வெளியாக இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் ஆடியோவும், ட்ரெயிலரும் இன்று யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

2 நிமிடம் 4 நொடிகள் ஓடும் லிங்கா ட்ரெயிலர் வெளியாகி சிலமணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

ரஜினி படம் என்றாலே ஒரு மாஸ் இருக்கும் முதல்நாள் முதல்ஷோ போய் பார்ப்பது என்பது ரஜினி ரசிகர்களுக்கே உரித்தானது. ஒவ்வொரு எழுத்தாக சூப்பர் ஸ்டார் என்று வருவது தொடங்கி ரஜினியின் பஞ்ச் வசனங்கள், அந்த நடை, அந்த ஸ்டைல் அனைத்துக்குமே அப்ளாஸ் அள்ளும்.

இன்று வெளியாகியுள்ள ட்ரெயிலரின் ஒவ்வொரு ப்ரேமும் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது என்றே கூறலாம். இந்த படத்தில் இரண்டு ரஜினியுமே மாஸ்தான். ரஜினியின் நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர்.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலும் இப்போது உள்ள காலகட்டத்திலுமாக இரு வேறு சம்பவங்களை உள்ளடக்கிய கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளது.

அணைதான் வாழ்க்கை

அணைதான் வாழ்க்கை

ஒரு அணைக்காக நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இதுதான் உங்களோட வாழ்க்கை... இதுதான் உங்க புள்ளைங்களுடைய முன்னேற்றம்....
இதுதான் உங்க தொழில், பொழைப்பு, சோறு, உழைப்பு, இடம், உடை, சந்தோசம் எல்லாம். என்று மக்கள் கூட்டத்தின் இடையே ரஜினி பேசும் இந்த வசனம் ஒரு உத்வேகம்.

ரஜினி பஞ்ச்

ரஜினி பஞ்ச்

நான் எந்த வேலையா இருந்தாலும் என் மனசுக்கு புடிச்சாதான் செய்வேன்.

வாழ்க்கையில எதுவும் ஈஸியில்ல... முயற்சி பண்ணா எதுவும் கஷ்டம் இல்லை.... கமான் பாய்ஸ் இந்த வசனம் வரும் போது நிச்சயம் தியேட்டர் அதிரும் என்பதில் சந்தேகமில்லை.

நாட்டுப்பற்று

நாட்டுப்பற்று

சுதந்திரத்திற்கு முந்தைய கதையில் நாட்டுப்பற்று மிக்க துடிப்பான ரஜினி தெரிகிறார்.

நீ அதிகமா பேசற... கொஞ்சமாவது பொறந்த நாட்டுக்கு நல்லது செய்யணும்னு அதிகமா பேசறேன்.

இளமை அனுஷ்கா

இளமை அனுஷ்கா

இளமையான ரஜினிக்கு இளமையான துடிப்பான அனுஷ்காவின் ஜோடி அருமை.

சோனாக்ஷியின் துள்ளல்

சோனாக்ஷியின் துள்ளல்

சுதந்திரத்திற்கு முந்தைய கதையில் வரும் ரஜினிக்கு ஜோடி சோனாக்ஷி. அந்த ரவிக்கை போடாத சேலை கட்டும்... மிரட்டலான பேச்சும் சான்ஸே இல்லை. தமிழில் தனி இடம் சோனாக்ஷிக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அது அது அதுதான் ரஜினி

அது அது அதுதான் ரஜினி

லெட்ஸ் பிகின்.... ஸீ யூ ஸூன்... என்பதோடு முடிகிறது லிங்கா ட்ரெயிலர்... தலைவா... ஈஸ் பேக்... இது சும்மா ட்ரெயிலர்தான். மெயின் பிக்சர். ரஜினி ரசிகர்களுக்கு தனி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.

லிங்கா ட்ரெயிலர்

லிங்கா.... ட்ரெயிலரே சும்மா அதிருதில்ல!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X