twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஓவிய கவிஞராக' மாறிய லிங்குசாமி... முதல் வெளியீடு லிங்கூ!

    By Shankar
    |

    சென்னை: இத்தனை ஆண்டுகளாக தான் வரைந்த ஓவியங்கள் மற்றும் கவிதைகளை இணைத்து ஒரு ஓவியக் கவிதைப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார் முன்னணி இயக்குநர் லிங்குசாமி. புத்தகத்தின் பெயர் லிங்கூ!

    ஆனந்தம், ரன், சண்டக்கோழி, வேட்டை உள்பட பல படங்களை இயக்கியவர். இன்றைய முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் லிங்குசாமி.

    இவர், கடந்த 23 வருடங்களாக எழுதிய கவிதை மற்றும் ஓவியங்கள், 'லிங்கூ' என்ற பெயரில் நூலாக தயாராகி இருக்கிறது. ஒவ்வொரு கவிதைக்கும் பொருத்தமாக அவரே வரைந்த ஓவியங்களை வைத்திருக்கிறார்.

    Lingusami's painting poetry Lingoo

    இதன் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. 'மெட்டல் டிபோசிஷன்' என்ற புதிய தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த நூலை பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட்டார். நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். இயக்குநர் கே.பாலசந்தர் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

    இயக்குநர் லிங்குசாமி இதுவரை வரைந்த ஓவியங்களை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் ஹவுசில் கண்காட்சியாக வைத்துள்ளார்.

    இதன் திறப்பு விழாவில் நடிகர் ஜோமல்லூரி, ஓவியர் ஸ்ரீதர், ஆர்ட் ஹவுஸ் வின்சென்ட் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    English summary
    Director Lingusami's first painting poetry Lingoo was released yesterday by PC Sriram and received by actor Mohanlal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X