20 ஆண்டுகள் நிறைவு… கொண்டாடும் மனநிலையில் இல்லை… லிங்குசாமி ட்வீட்!
சென்னை : பிரபல இயக்குனர் லிங்குசாமி தமிழ் திரைப்படத்துறைக்குள் நுழைந்து 20ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
இவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தள பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதற்கு ட்விட்டரின் மூலம் நன்றி தெரிவித்துள்ள லிங்குசாமி, இதைக்கொண்டாடக் கூடிய மனநிலையில் இல்லை, அனைவருக்காகவும் முதலில் பிரார்த்தனை செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

விக்ரமிடம் உதவியாளராக
இயக்குனர் விக்ரமிடம் உதவி இயக்குனரா இருந்த லிங்குசாமி 2001ம் ஆண்டு ஆனந்தம் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில், மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயாணி, ரம்பா, சினேகா,ஸ்ரீவித்யா என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். குடும்ப பின்னணியில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஆக்ஷன் கலந்த காதல்
அடுத்ததாக ரன் படத்தை இயக்கினார். இந்த படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மீன் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த காதல் திரைப்படமாகும். இதில் வரும் காதல் காட்சிகள் அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போக இத்திரைப்படம் திரையில் அதிக நாட்கள் 'ரன்' ஆனது.

தயாரித்துள்ளார்
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் என பல ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்துள்ளார். இயக்குனராக இருந்த லிங்குசாமி, தீபாவளி, பட்டாளம்,வழக்கு எண்18/9,கும்கி, இவன் வேற மாதிரி,ரஜினி முருகன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.

அனைவருக்கும் நன்றி
இந்நிலையில்,லிங்குசாமி தமிழ் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பல திரைப்பிரபலங்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்த லிங்குசாமி, 20 ஆண்டுகள் என்னை ஆதரித்த எனது தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், நண்பர்கள் ,குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

உண்மையான ஆனந்தம்
மேலும், நாம் இப்போது இதைக்கொண்டாடக்கூடிய மனநிலையில் இல்லை, அனைவருக்காகவும் முதலில் பிரார்த்தனை செய்வோம். இந்த தொற்றிலிருந்து விரைவில் நம் அருகில் இருப்பவர்கள் மீள்வதே உண்மையான ஆனந்தம், உங்கள் எல்லா வாழ்த்துக்களுக்கும் நன்றி அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். முக்கியமாக ஊடக நண்பர்களுக்கும் அவர்களின் ஆதரவுக்கும் ஒரு சிறப்பான நன்றி என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











