twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெ. படத்தை 3 அல்ல 4 பேர் இயக்குகிறார்கள்: லேட்டஸ்ட் லிங்குசாமி, தயாரிப்பது திவாகரன் மகன்

    By Siva
    |

    சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை லிங்குசாமி இயக்க உள்ளார். அந்த படத்தை சசிகலாவின் உறவினர் ஜெயனானந்த் தயாரிக்கிறார்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப் போவதாக பாரதிராஜா, ப்ரியதர்ஷினி, ஏ.எல். விஜய் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

    ப்ரியதர்ஷினியின் படத்தில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளார்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை நான்காவது ஆளாக லிங்குசாமி இயக்க உள்ளார். இந்த படத்தை சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தயாரிக்க உள்ளார். நான்கு பேர் போட்டி போட்டு படம் எடுக்கும் நிலையில் அத்தையை பற்றி யாரும் படம் எடுக்கக் கூடாது என்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்.

    அறிவிப்பு

    அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குநர் எனது நண்பர் திரு.லிங்குசாமி அவர்களால் படமாக்கப்படும். இதில் நடராஜன் மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குநர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும் என்று ஜெயானந்த் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    #natarajan_76_birthday

    தலைப்பு

    தலைப்பு

    ப்ரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு தி அயர்ன் லேடி #THEIRONLADY என்று பெயர் வைத்துள்ளார். டைட்டில் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ட்விட்டரில் வெளியிட்டார். படப்பிடிப்பு ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று துவங்க உள்ளது. அதே நாளில் தான் ஏ.எல். விஜய்யும் தனது படப்பிடிப்பை துவங்குகிறார்.

    என்னது இது?

    என்னது இது?

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரே நேரத்தில் நான்கு பேர் தனித் தனியாக இயக்க உள்ளனர். இதனால் ரசிகர்கள் தான் குழப்பம் அடைந்துள்ளனர். பாரதிராஜாவின் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் அல்லது அனுஷ்கா ஜெயலலிதாவாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தன் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் ஐஸ்வர்யா ராய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஜெயலலிதாவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Jeyanandh Dhivakaran has announced that Lingusamy will be directing late chief minister Jayalalithaa's biopic which will be produced by him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X