Anjaan Re Release: ரசிகை சொன்ன அந்த வார்த்தை.. லிங்குசாமி கொடுத்த உடனடி ரிப்ளை.. மனுஷன் தெளிவு
சென்னை: நடிகர் சூர்யா, வித்யூ ஜமால், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அஞ்சான். படம் கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பெரிய தோல்வி படமாக மாறியது. இதற்கு காரணம் பல முன் வைக்கப்பட்டது. இப்படி இருக்கும்போது, படத்தின் ரீ-ரிலீஸ்க்காக இயக்குநர் லிங்குசாமி படத்தின் எடிட்டிங்கில் பல மாற்றங்களைச் செய்து படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளார். படம் வெளியாகி முதல் நாளே பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுடனான சந்திப்பின்போது அஞ்சான் படம் எடுத்ததற்காக தான் பெருமைப்படுவதாக லிங்குசாமி தெரிவித்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அஞ்சான் படம் 2014ஆம் ஆண்டே சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம். படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் லிங்குசாமி. படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை என்பது, திரைத்துறையில் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால் படத்தின் கதைக்கு ஏற்ற திரைக்கதை இல்லை என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது. குறிப்பாக, இடையிடையே வரும் சில காட்சிகள் படத்தின் திரைக்கதையின் வேகத்தை குறைப்பதாக இருக்கிறது என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது.

இப்படி இருக்கும்போது அஞ்சான் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படம் நேற்று அதாவது நவம்பர் 28ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. படத்திற்கு ரசிகர்கள் ஏக போக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். முதல் நாளே படம் ரூபாய் 75 லட்சங்கள் தமிழ்நாட்டில் வசூலித்ததாக கூறப்படுகிறது.
ரசிகை பளிச்: இதற்கிடையில் படத்தின் புரோமோஷனுக்காக சூர்யா ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வடுகிறார் லிங்குசாமி. அப்போது அவரிடத்தில் பேசிய ரசிகை ஒருவர், " அஞ்சான் படத்தின் டைட்டில் டிசைனை நான் பள்ளியில் எனது பெஞ்சில் ஸ்டீல் ஸ்கேல் மூலம் வரைந்து வைத்தேன். பாட்டு புத்தகம் வாங்கி அஞ்சான் படத்தின் அனைத்து பாடல்களையும் நானும் எனது தோழிகளும் இணைந்து பாடி உள்ளோம். இதையெல்லாம் மறக்கவே முடியாது. அஞ்சான் எனது பதின்பருவத்தில் உச்சகட்ட கொண்டாட்டங்களில் ஒன்று. ஃபேன் கேர்ள் மொமண்ட்டை அஞ்சான் படம் எனக்கு உண்மையாக கொடுத்தது" என்று கூறினார்.
லிங்குசாமி ரியாக்ஷன்: இதைக் கேட்ட லிங்குசாமி, அஞ்சான் என்ற படம் எடுத்ததற்காக நான் இன்றைக்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன்" என்று கூறினார். இந்த உரையாடல் தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அஞ்சான் படத்திற்கான டிக்கெட்டுகள் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் நாளை வரை அதாவது நவம்பர் 30ஆம் தேதி வரை ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications










