மணிரத்னத்தின் கடல்.. வாங்கினார் லிங்குசாமி!

By Shankar

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட காலமாக உருவாகி வரும் கடல் படத்தின் விநியோக உரிமையை வாங்கினார் பிரபல இயக்குநர் லிங்குசாமி.

மணிரத்னம் இயக்க, ஏ ஆர் ரஹ்மான் இசைக்க, கார்த்திக் மகன் கவுதம், ராதா மகள் துளசி நடிக்கும் படம் கடல்.

முட்டம் உள்ளி்ட்ட தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

சர்ச்சை..

சர்ச்சை..

அதே நேரம் இந்தப் படம் சர்ச்சைக்கும் உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தில் 16 வயது கூட நிரம்பாத பெண்ணை லிப் டு லிப் கிஸ்ஸடிக்க வைத்துள்ளார் மணிரத்னம். இது ஆட்சேபணைக்குரியது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீர்ப்பறவை காப்பி..

நீர்ப்பறவை காப்பி..

மேலும் படத்தின் கதை ஏற்கெனவே வெளிவந்த நீர்ப்பறவையின் காப்பி என்றும் கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈர்க்காத ட்ரைலர்...

ஈர்க்காத ட்ரைலர்...

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் மணிரத்தனம். 2 நிமிடத்துக்கும் அதிகமாக ஓடிய அந்த ட்ரைலரும் சுவாரஸ்யமாக இல்லை என்று கூறப்பட்டது. இதனால் படம் குறித்த எதிர்மறை கருத்துகள் வேகமாக பரவி வந்தன.

லிங்குசாமியின் துணிச்சல்

லிங்குசாமியின் துணிச்சல்

இந்த நிலையில் படத்தின் விநியோக உரிமையை இயக்குநர் லிங்குசாமி வாங்கியுள்ளார். சென்னை, கோவை, மதுரை விநியோக உரிமையை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. மற்ற பகுதிகளில் சன் ஸ்ரீ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

பிப் 1 முதல்...

பிப் 1 முதல்...

வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது கடல். 200 க்கும் அதிகமான தமிழக அரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X