#RAP019 படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரம்மாண்ட இயக்குனர்! வைரலாகும் புகைப்படங்கள்
சென்னை: தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து லிங்குசாமி தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்.
ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இந்தப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாததால் #RAPO19 என்றழைக்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நல்ல வரவேற்பு
தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகரான ராம் பொத்தினேனி கடைசியாக தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். தடம் படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை போல தெலுங்கிலும் கிடைத்தது. அதை தொடர்ந்து லிங்குசாமி உடன் இணைந்துள்ளார் ராம் பொத்தினெனி.

பழைய டிராக்
லிங்குசாமி பழைய டிராக்குக்கு திரும்ப இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என தெரிகிறது. எனவே ராம் பொத்தினெனியை வைத்து லிங்குசாமி இயக்கி வரும் இந்தப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. க்ரித்தி ஷெட்டியும் இந்த படத்தில் நடிக்கிறார். நடிகை நதியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வைரலான பிக்
கொரோனா தொற்று காரணமாக முடங்கி கிடந்த படப்பிடிப்பு பணிகள் தற்போது சில தளர்வுகளுடன் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஜூலை 12ம் தேதி திட்டமிட்டபடி #RAPO19 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ராம் பொத்தினேனியின் புகைப்படம் ட்விட்டரில் வைரலானது.

வைரலான புகைப்படம்
இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் #RAPO19 படக்குழுவை நேரில் சந்தித்துள்ளார். இயக்குனர் லிங்குசாமியுடனும், நடிகர் ராம் பொத்தினெனியுடனும் கலந்துரையாடியுள்ளார் ஷங்கர். படக்குழுவினருடன் இயக்குனர் ஷங்கர் எடுத்த கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











