உதவி இயக்குநர் படுகாயம்... உயர் சிகிச்சை தந்து, அருகிலிருந்து கவனிக்கும் லிங்குசாமி!

By Shankar

நான்தான் சிவா படத்தின் ஷூட்டிங்கில் படுகாயமடைந்த உதவி இயக்குநர் பாஸ்கரை நேரில் பார்த்து நலம் விசாரித்த இயக்குநர் லிங்குசாமி, அவர் பூரண குணமடையும் வரை தானே அனைத்தையும் பார்த்துக்கொள்வதாக குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ரேணிகுண்டா, 18 வயசு படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கத்தில் வளரும் படம் நான்தான் சிவா.

Lingusamy helps assistant director

இந்தப் படத்தில் லிங்குசாமியின் அண்ணன் மகன் வினோத் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அர்ஷிதா ஷெட்டி. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் 20 அடி உயரத்திலிருந்து உதவி இயக்குநர் பாஸ்கர் தவறி விழுந்தார். இதில் அவரது கை கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைக் கேள்விப்பட்டதும் மருத்துவமனைக்கு விரைந்தார் இயக்குநர் லிங்குசாமி. உதவி இயக்குநர் பாஸ்கரை நலம் விசாரித்த அவர், அவரது சிகிச்சைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அருகிலிருந்து செய்தார். உயர் சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். குடும்பத்தினருக்கும் தான் இருப்பதாக ஆறுதல் கூறினார்.

Lingusamy helps assistant director

அஞ்சான் பிரச்சினை, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் என பல்வேறு பிரச்சினைகள் தன்னைச் சூழ்ந்திருந்தாலும், மனிதாபிமானத்துடன் ஒரு உதவி இயக்குநருக்கு அவர் செய்திருக்கும் பெரும் உதவியை நினைத்து நான்தான் சிவா குழுவே நெகிழ்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X