twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புலி‌ வருதுனு சொன்னாங்க.. இப்போ சிங்கமே வந்துருச்சு.. ரஜினி முடிவுக்கு லாரன்ஸ், லிங்குசாமி வாழ்த்து!

    By
    |

    சென்னை: கட்சித் தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளதை அடுத்து, நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் லிங்குசாமி உட்பட பலர் அதை வரவேற்றுள்ளனர்.

    Recommended Video

    Annaatthe Shooting முடிந்தவுடன் கட்சிப் பணி: Rajini உறுதி

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவர் ரசிகர்கள் பல வருடங்களாக கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த 2017 ஆம் வருடம் ரசிகர்களை சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார்.

    பரபரப்பு அறிக்கை

    பரபரப்பு அறிக்கை

    ஆனால், அவ்வப்போது அரசியல் கருத்துக்களை கூறி வந்த அவர், எப்போது அரசியல் கட்சி தொடங்குவார், கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், அக்டோபர் மாதம் ரஜினி பெயரில் பரபரப்பு அறிக்கை வெளியானது. அதில், அக்டோபர் 2 ஆம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சி பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.

    சந்திக்க முடியலை

    சந்திக்க முடியலை

    கொரோனா பிரச்சினை காரணமாக, யாரையும் சந்திக்க முடியவில்லை. 2011 ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தேன். அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தேன். அரசியலில் ஈடுபடலாமா என்று டாக்டர்களிடம் கேட்டபோது, அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றனர்.

    தயாராக இருக்கிறேன்

    தயாராக இருக்கிறேன்

    எனவே சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களும், ரசிகர்களும் என்ன முடிவு எடுக்க சொல்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் என் உடல் நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரை குறித்த தகவல்கள் உண்மைதான். என்று தெரிவித்தார்.

    கட்சி தொடங்க

    கட்சி தொடங்க

    இந்நிலையில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சில நாட்களுக்கு முன் சந்தித்தார் ரஜினி அப்போது அவரிடம் கட்சி தொடங்க அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக தனது ட்விட்டரில் ரஜினி அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்புகளை டிசம்பர் 31 இல் வெளியிடுவேன் என கூறியுள்ளார்.

    மக்களுடைய தோல்வி

    மக்களுடைய தோல்வி

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த நேரத்தில் என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய முற்படுகிறேன். எனவே வெற்றியடைந்தால் மக்களுடைய வெற்றியாகக் கருதப்படும். தோல்வியடைந்தால் அது மக்களுடைய தோல்வி. எல்லா நாடுகளுக்கும் ஒரு தலையெழுத்து இருக்கும். தமிழகத்திற்கும் தலையெழுத்து உள்ளது.

    எப்பவுமே இல்லை

    எப்பவுமே இல்லை

    எனவே தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆட்சிமாற்றம், அரசியல் மாற்றம், இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்லை என்றார் ரஜினிகாந்த். இதையடுத்து அவர் முடிவை நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குனர் லிங்குசாமி உள்பட பலர் வரவேற்றுள்ளனர்.

    நிச்சயம் நிறைவேறும்

    நிச்சயம் நிறைவேறும்

    ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டில், நன்றி தலைவா. இந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நொடிக்காக காத்திருந்த உங்கள் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். இந்த கொரோனா காலகட்டத்தில், உடல்நிலையை கூட கருத்தில் கொள்ளாமல் மக்களுக்காக சேவை செய்ய களம் இறங்கி இருக்கிறீர்கள். உங்கள் கனவு நிச்சயமாக நிறைவேறும்' என்று கூறியுள்ளார்.

    சிங்கமே வந்துருச்சு

    சிங்கமே வந்துருச்சு

    இயக்குனர் லிங்குசாமி, 'புலி‌ வருது .. புலி வருதுனு சொன்னாங்க.. ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு. வாழ்த்துக்கள் சார் என்று கூறியுள்ளார். இந்நிலையில், #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

    English summary
    Lingusamy, Lawrence welcomes Rajinikanth's political decision
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X