லிங்குசாமியின் படத்தில் மீண்டும் மாதவன்?.. இந்த முறை வில்லனாக
சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் வகையில் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி.
சமீப காலமாக லிங்குசாமியின் படங்கள் சோபிக்க தவறி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை.
இந்நிலையில் ராம் பொத்தினேனியை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

சிறந்த இயக்குனர்
ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தவர் லிங்குசாமி. இந்த திரைப்படங்கள் வெளியான வேளையில் ரசிகர்கள் மத்தியில் சிறந்த இயக்குனராக வலம் வந்தார் லிங்குசாமி.

பழைய ட்ராக்
அதன் பின் லிங்குசாமி இயக்கிய அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் சோபிக்க தவறி தோல்வி அடைந்தது. லிங்குசாமி மீண்டும் எப்போது பழைய ட்ராக்குக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

இரண்டு மொழிகளில்
இந்நிலையில் லிங்குசாமி அடுத்ததாக ராம் பொத்தினேனியை வைத்து படம் இயக்க போவதாக கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பினார். ஆக்சன் படமாக தயாராகும் இது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவரவுள்ளது.
Recommended Video

விரைவில் அறிவிப்பு
இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க மாதவனை லிங்குசாமி தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே லிங்குசாமியின் ரன், வேட்டை படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் மாதவன். இந்த முறை வில்லனாக நடிப்பாரா என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கும்.


Click it and Unblock the Notifications











